சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை".. கோவா அமைச்சரின் புகாருக்கு.. பி.டி.ஆரின் பொளேர் பதிலடி!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா மருந்து பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். அதோடு கோடின்ஹோ வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிடிஆர் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

    பெரிய மாநிலங்களில் பெறப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு கொடுக்கபடுகிறது Ptr Palanivel Thiyagrajan

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னிரிமை கொடுக்க வேண்டும் என்று கோடின்ஹோ கோரிக்கை வைத்தார்.

    ஆனால் இதை பிடிஆர் எதிர்த்ததாகவும், கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கூடாது என்று பிடிஆர் பேசியதாகவும் கோடின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். அதோடு பிடிஆர் இதற்காக கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோடின்ஹோ குறிப்பிட்டு இருந்தார். இதற்குதான் தற்போது பிடிஆர் அதிரடி பதில் அளித்துள்ளார்.

    பேரிடர் காலத்தில் தடுப்பூசிக்கெல்லாம் வரி பெற்றுதான் பிழைக்க வேண்டுமா?.. அமைச்சர் பிடிஆர் பாய்ச்சல் பேரிடர் காலத்தில் தடுப்பூசிக்கெல்லாம் வரி பெற்றுதான் பிழைக்க வேண்டுமா?.. அமைச்சர் பிடிஆர் பாய்ச்சல்

    பதில்

    பதில்

    கோடின்ஹோவிற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதிலில், குறைகுடம்தான் கூத்தாடும். தமிழகத்தின் நிதி அமைச்சராக நான் என் மாநிலத்தில் பல பொறுப்புகளை கவனித்து வருகிறேன். 8 கோடி மக்கள் வசிக்கும் மாநிலத்தில் மக்களுக்காக நான் பல பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறேன், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். எனவே பொதுவாக தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்.

    அமைச்சர்

    அமைச்சர்

    ஆனால் இப்போது கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும், நான் கோவா மக்களை அவமானப்படுத்தியாக வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். அதோடு இது போன்ற நபர்களால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இரண்டு

    இரண்டு

    நான் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வைத்தேன், முதல் விஷயம், ஒரு மாநிலம் = ஒரு வாக்கு என்ற ஜிஎஸ்டி மாடல் தவறு. அதை கைவிட்டுவிட்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வாக்குகளை கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து கவுன்சில் தொடங்கி நாடாளுமன்றம் வரை மக்கள் தொகை அடிப்படையிலேயே பிரநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அதேபோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

    கோரிக்கை

    கோரிக்கை

    அதோடு சுய மரியாதை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில், மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பேசினேன். திராவிட கொள்கையான அதிகார பரவல் குறித்தும், சுயாட்சி குறித்தும், ஒன்றியத்தில் இருந்து உரிமைகளை பரவலாக்கி மாநிலங்களின் அனைத்து மூலைக்கும் கொண்டு செல்வது குறித்து பேசினேன். நான் மீட்டிங்கில் பேசிய அனைத்து விஷயங்களும் இந்த இரண்டு தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து அமைந்து இருந்தன.

    ஸ்பெஷல்

    ஸ்பெஷல்

    அதேபோல் கொரோனா தடுப்பு பணிக்காக ஸ்பெஷல் செஸ் வரி என்ற சிக்கிம் போன்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவே பேசினேன். செஸ் வரி வசூல் தொடர்பாக கோவா அஜெண்டா எதையும் முன் வைக்காத போது, நான் எப்படி கோவாவிற்கு எதிராக வாக்களிக்க முடியும்? செஸ் வரி வசூல் குறித்து கோவா எந்த அஜெண்டாவையும் விவாதிக்காத போது எப்படி அதில் நான் வாக்களிக்க முடியும்?.

    குறைப்பு

    இதனால்தான் கோவா அமைச்சரின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது . அதோடு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறேன், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா மருந்து பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். மனித நேய அடிப்படையில் வரியை குறைக்க வேண்டும் என்ற போது அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் வாக்களித்தார்.

    மீண்டும்

    மீண்டும்

    அதேபோல் அவர் இந்த மீட்டிங்கில் மீண்டும் மீண்டும் சொன்ன விஷயத்தையே திருப்பி பேசினார். அவரின் பேச்சு வெறுமையாக இருந்தது மற்றவர்களை குறுக்கிடும் விதமாக இருந்தது. 20 கோடி மக்கள் தொகை உள்ள உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்து கோவா அமைச்சர் பேசினார். இது இந்திய ஜனநாயகத்திற்கு சரியானதா என்று மக்களே முடிவு செய்யட்டும்.

    முடியாது

    முடியாது

    நான் கோவா மக்களிடம் எந்த பொழுதிலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் அவர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அதே சமயம் உங்களின் மாநில உரிமைக்காக நான்தான் பேசினேன். அவர்களின் உரிமைக்காகவே பேசினேன். அதற்கான நன்றியை நான் எதிர்பார்க்கவில்லை. . மாநில உரிமைகளை நிலைநாட்டுவதுதான் என் குறிக்கோள். அதே சமயம் கோவா மக்களுக்கு என் அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.

    அனுதாபம்

    அனுதாபம்

    இப்படி ஒரு நபர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்ததற்கு அனுதாபத்தை தெரிவிக்கிறேன். அதோடு பாஜகவிற்கு ஒரு அறிவுரை வழங்கவும் விரும்புகிறேன். அடுத்த முறை பிற கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை உங்கள் கட்சிக்கு இழுக்கும் போது கொஞ்சம் தகுதியான நபர்களை கட்சிக்குள் இழுக்க வேண்டும் என்று கேட்கிறேன். அப்படி செய்திருந்தால் கோவாவும் மொத்த நாடும் கொஞ்சம் பலன் அடைந்திருக்கும், என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்த முந்தைய ட்வீ ட்டில் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தனது செய்தியாளர் சந்திப்பில் பொய் கூறிவிட்டதாக குறிப்பிட்டார். 17 வருடம் காங்கிரசில் இருந்து பின் பாஜகவிற்கு தாவிய இவர் அபாண்டமாக பொய் சொல்கிறார், என்று கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

    English summary
    Tamil Nadu finance minister PTR Palanivel Thiagarajan gives a befitting reply to the Goa minister Mauvin Godinho.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X