மீண்டும் தமிழ்நாட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ஃபோர்டு.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு வேற லெவல் வருகை!
சென்னை: 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் முதல் சென்னை மறைமலை நகர் ஆலையை அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் ரூ.3,250 கோடி முதலீட்டில் நவீன வாகன எஞ்சின்களின் உற்பத்தி இங்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஃபோர்டு கார் நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் மீண்டும் கால்பதிக்கப் போகிறது. மீண்டும் களமிறங்குவதோடு மட்டுமல்லாமல், ரூ.3,250 கோடி முதலீட்டில் பலருக்கு வேலைவாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்கப் போகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும், ஃபோர்டு நிறுவனத்துக்கும் இடையே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்தானது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரூ.1,700 முதலீட்டில் கடந்த 1999 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஃபோர்டு நிருவனத்தின் உற்பத்தி தொழிற்ச்சாலை திறக்கப்பட்டது. பின்னர், 2009 ஆம் ஆண்டு ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த தொழிற்சாலையின் மூலமாக, ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், நாளடைவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி இழப்பை சந்திக்க தொடங்கியது. இதனால் கார் என்ஜின்களின் ஏற்றுமதி சரிந்ததால், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன விற்பனையையும், உற்பத்தியையும் நிறுத்தியது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் மறைமலை நகரில் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் வேலை இழந்தனர். ஆனாலும், ஃபோர்டு நிறுவனம் மறைமலை நகரில் இருந்த தனது 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொழிற்சாலையை யாருக்கும் விற்க முன்வரவில்லை. அந்த தொழிற்சாலையை வாங்க பல பிரபல நிறுவனங்கள் முயன்றபோதும் ஃபோர்டு அதை விற்கவில்லை.
இந்நிலையில்தான், 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவுக்கு அவர் அரசு முறைப் பயணமும் மேற்கொண்டார்.
சிகாகோ நகரில் ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் மீண்டும் தொழிற்சாலை செயல்பாடுகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, ஃபோர்டு நிறுவனம், ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக, வாகன இன்ஜின் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஃபோர்டு நிறுவனம் தனது மறைமலைநகர் ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான அதிநவீன என்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இவை பெரும்பாலும் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம், சென்னையில் சுமார் 600 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் சென்னையில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க ஆயத்தமாகி வருவது ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்பாட்டுக்கு வருவதால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications