’அவர்’ வாயில் நல்ல வார்த்தை வராது! ஆளுநருக்கு எதிர்ப்பா? வரிந்து கட்டிய ஓபிஎஸ்! அதிகாரம் இல்லையாம்!
சென்னை : தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளில் இன்றைக்கு சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி நேரத்திற்கு தகுந்த மாதிரி பொய் சொல்வதில் முதன்மையானவர் எடப்பாடி பழனிச்சாமி என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் சென்னை பகுதியில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது," நாமக்கலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி சொல்லி இருந்தார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என்று அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்

தொண்டர்கள் இணைய வேண்டும்
அதிமுகவில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக உள்ளது . நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முறையான செய்திகள் உங்களை அழைத்துச் சொல்லப்படும். துணை முதல்வர் என்ற பொறுப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் படி கிடையாது, நாம் தான் வைத்து கொண்டோம், முதலமைச்சருக்கு இருக்கின்ற பிரத்தியேக அதிகாரம் துணை முதலமைச்சருக்கு இல்லை

ஜெயக்குமார்
ஜெயக்குமார் வாயில் நல்ல விஷயங்கள் எதுவும் வராது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாவட்ட கழக செயலாளர்கள் பணிகள் நிறைவடைந்த பிறகு மாவட்டம் தோறும் தொண்டர்களை சந்திக்கும் பயணம் உறுதியாக நடக்கும். திமுக செய்யத் தவறியதைப் பற்றி தினம்தோறும் அறிக்கை வாயிலாக நான் வெளியிட்டு வருகிறேன், இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் திமுக ஆளும் கட்சி அவர்களுடைய தவறுகளை நேரடியாக எதிர்க்கின்ற எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். உள்குத்து எதுவும் இல்லை.

ஆளுநருக்கு ஆதரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரை பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிக்கொண்டு வருவது தவறான முன்னுதாரணமாக அமையும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவருக்குரிய கடமைகளை ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார், ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகவில்லை. ஆளுநர் பதவி தேவையில்லை என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் ஆளுநர் உயர்கல்வித்துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பதவியை கொடுத்ததாக கூறியிருந்தார். தவறு நடந்து இருந்தால் ஓபிஎஸ் கூட தவற செய்திருந்தால் சட்டப்படி விசாரணைக்கு உட்பட்டு தண்டனை வழங்க வேண்டும். அதிமுகவில் சட்டபூர்வமான ஒருங்கிணைப்பாளர் நான் தான் . அதிமுகவில் பொறுப்பாளர்களை நியமிக்க அதிகாரம் எனக்கு தான் உள்ளது. எலக்சன் கமிஷன் பட்டியலில் என் பெயர் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளது
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications