• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

யாரு..ங்க ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே... மார்க்கண்டேய கட்ஜு வேதனை!

|

சென்னை: ரஜினிக்கு மண்டையில் ஒன்னுமே இல்லை என்று அன்று சொல்ல ஆரம்பித்த மார்க்கண்டேய கட்ஜூ இன்றுவரை ரஜினி மீதான தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லை... "ரஜினிக்கு ஆன்மீகம் தவிர மக்கள் பிரச்சனை பற்றி ஏதாவது தெரியுமா?" என்று ட்வீட் போட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழ்நாடு என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம்.. ஒரு இணைப்பு.. ஒரு பிணைப்பு.. இதற்கு காரணம் எல்லாம் தெரியவில்லை.

ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, இப்படி நம் மாநிலத்தை அசைக்கும் பிரச்சனைகளில் தானாகவே முன்வந்து கருத்துக்களையும் ஆதங்கத்தையும் கொட்டிவிட்டு போவார் கட்ஜூ.. இது சம்பந்தமான கருத்துக்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூர்மையாகவே கவனிக்கப்படும்.. அந்த வகையில் ரஜினி குறித்தும் அடிக்கடி கருத்து சொல்வார்.

 சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

ஆனால் இதுவரை ரஜினிக்கு ஆதரவாக அவர் எதையுமே பேசியதில்லை.. ஒருமுறை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. "நான் 1967-68-ல் படிச்சிட்டு இருந்தபோது, சில தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் படம் ஒன்றை பார்க்க சென்றிருந்தேன்.. சிவாஜி கணேசன் திரையில் தோன்றிய போது, ரசிகர்கள் அவருக்கு கொடுத்த அந்த பிரம்மாண்டமான வரவேற்பு இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.. அந்த மாதிரி இப்போதும் தென்னிந்திய ரசிகர்கள் ரஜினிகாந்தின் மீது பைத்தியமாக உள்ளார்கள்.

 வறுமை, வேலையின்மை

வறுமை, வேலையின்மை

சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுகூட ஆசைப்படுகிறார்கள்.. ஆனால், ரஜினிகாந்திடம் என்ன ஐடியாக்கள் இருக்கு? மிகப்பெரிய பிரச்சனைகளான வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதார பற்றாக்குறை, விவசாயிகளின் துயரங்கள் இதுக்கெல்லாம் ரஜினிகிட்ட விடை இருக்கா? அவரிடம் ஒரு விஷயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை... அப்புறம் ஏன் மக்கள் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள்?

 தலையில் ஒன்னும் இல்லை

தலையில் ஒன்னும் இல்லை

ரஜினிகாந்திற்கு தலையில் ஒன்றும் கிடையாது" என்று காட்டமாகவே கட்ஜூ கூறியிருந்தார்.. அவர் இப்படி சொன்னது 2017-ம் ஆண்டில்.. இதே கருத்தைதான் இப்போதும் திடமாக கொண்டிருக்கிறார்.. ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க போவதாக, நேற்றைய தினம் ரஜினி அறிவிப்பு வெளியிடவும் பல கட்சி தலைவர்கள் அதை பற்றி கருத்து தெரிவித்தனர்.. பெரும்பாலும் பலர் வரவேற்றேதான் கருத்து சொன்னார்கள்.

 ட்வீட் பதிவு

ட்வீட் பதிவு

ஆனால் கட்ஜு மட்டும் மாறுபட்ட கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. "ரஜினிகாந்த் பெரும்பாலும் அரசியலில் ‘ஆன்மீகம்' பற்றி பேசுகிறார்.. ஆனால், மக்கள் ஆன்மீகத்தை விரும்பவில்லை.. வேலைகள், உணவு, சுகாதாரம், நல்ல கல்வி போன்றவற்றை அவருக்கு வழங்க தெரியாது... ஆன்மீகத்தைப் பற்றிய அவரது பேச்சு அவர் ஒரு வாய்சவடால் மட்டுமே.. அவரது தலையில் எதுவும் இல்லை... ஆன்மீகம் என்பது தாழ்மையானது" என்று கூறியுள்ளார்.

 முட்டாள்தனம்

முட்டாள்தனம்

அதுமட்டுமல்ல, ரஜினிகாந்த் அரசியலில் நுழைவது இது சிலரை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.. மக்களின் பெரிய பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து அவருக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? அவருக்கு யாரும் இல்லை என்று நினைக்கிறேன்... தமிழர்கள் மிகவும் அறிவார்ந்த மக்கள்... ஆனால் அவர்கள் திரைப்பட நட்சத்திரங்களின் மீதான மோகத்தில் முட்டாள்தனமாக தெரிகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

 
 
 
English summary
Former Judge Markandey Katju says about Rajinikanth Political entry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X