பரபரத்த தலைமைச் செயலகம்.. கோவை செல்வராஜ் எதிரேயிருந்த அதிமுக பலகையை நைஸாக நகர்த்திய ஜெயக்குமார்!
சென்னை: தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்க்காமல் அமர்ந்திருந்தனர்.
Recommended Video
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனைத்து தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டார். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆலோசனைக்கூட்டம்
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

கோவை செல்வராஜ்
தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜூம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் முன்னதாகவே முதல் ஆளாய் வந்தார் கோவை செல்வராஜ். அப்போது அவர் முன்பாக அதிமுக என்ற பெயர் பலகை இருந்தது.

ஜெயக்குமார்
இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வந்து கோவை செல்வராஜ் அருகே அமர்ந்தார் ஜெயக்குமார். உடனே டக்கென்று அதிமுக என்னும் பெயர் பலகையை தங்கள் பக்கம் எடுத்து வைத்துக்கொண்டார் ஜெயக்குமார். அதைப்பார்த்து கோவை செல்வராஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

முகம் பார்க்காத கோவை செல்வராஜ்
சில மாதங்களுக்கு முன்பு வரை அண்ணன் தம்பிகளாக பேசி சிரித்தவர்கள் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் பிரிந்த பின்னர் ஒருவரை ஒருவர் ஊடகங்களில் பேட்டி கொடுத்து சண்டை போட்டு வருகின்றனர். இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் அருகில் ஜெயக்குமார் அமர்ந்திருந்தும் அவர் பக்கம் முகத்தை திருப்பவேயில்லை. பொள்ளாச்சி ஜெயராமனுடன் மட்டும் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications