சட்டசபை ஜால்ரா சபையாகிவிட்டது! திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக! கேஜிஎப் டயலாக் பேசிய ஜெயக்குமார்
சென்னை : சட்டசபை துதிபாடும், ஜால்ரா சபையாக மாறிவிட்டது, ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை எனவும், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
அதிமுக சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், " கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில் அதிமுக பந்தல் அமைத்து வருகிறது. வேறு எந்த கட்சியும் தண்ணீர் பந்தல் திறக்கவில்லை. அரசை பொருத்தவரையில் மக்கள் எப்படி போனாலும் பிரச்சனை இல்லை என்று இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது. திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது. காலம் காலமாக இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத அரசாக, விளம்பரத்திற்கான அரசாக, ஸ்டன்ட் அரசாக உள்ளது.

காவல்துறை விசாரணையா?
காவல்துறை தப்பிற்கு காவல்துறை விசாரணையா? திமுக ஆட்சியில் தான் 5 பேர் லாக்கேப் பில் மரணம் ஆகி உள்ளனர் அதற்கு முதல்வர் தான் பதில் கூற வேண்டும். சட்டசபை துதிபாடும், ஜால்ரா சபையாக மாறிவிட்டது, ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை. மத விவகாரத்தில் அரசு மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெட்ரோல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

உரிய அங்கீகாரம்
இதற்கு திமுக தோழமை கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை?, திமுகவில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறுவார்கள். திமுகவில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடையாது. பாதியில் செல்பவர்களுக்கு பதவி கொடுத்தால் ஏற்கனவே இருக்கும் மூத்தவர்கள் என்ன செய்வார்கள்.

திமுக படு தோல்வி
திமுக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் ஆல் அட்ரஸ் இல்லாமல் பொய் இருக்கும்..அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி அடையும் தேர்தலுக்காக நிறைய வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து விட்டு தற்போது அதனை நிறைவேற்றாமல் நிதி பற்றாக்குறை என்று நிதியமைச்சர் தெரிவிக்கிறார்." என கூறினார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications