அதிமுகவுக்கு தாவினார் செங்கோட்டையன் அண்ணன் மகன் கே.கே.செல்வன்.. திமுக + தவெகவுக்கு ஷாக்!
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் அதிமுகவில் இணைந்துள்ளார். கே.கே. செல்வன் திமுகவில் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். அண்மையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கே.கே. செல்வன். இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் ஆவார். இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் - அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். கே.கே. செல்வன் முதலில் அ.தி.மு.கவில் இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்.

தி.மு.கவில் கே.கே. செல்வனுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கே.கே.செல்வன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இது ஈரோடு மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கே.கே.செல்வன், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து, முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன் விலகி, எதிர்க்கட்சியான அதிமுகவில் சேர உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் கே.கே. செல்வன் கூறுகையில், தி.மு.க.வில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. முதலமைச்சர் பெயரைச் சொல்லி பல்வேறு தவறுகள் நடக்கிறது. இது போன்ற காரணங்களால் நான் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் எனக் கூறியுள்ளார்.
கோபி சட்டமன்ற தொகுதியின் முக்கிய அரசியல் முகமான செங்கோட்டையன், சமீபத்தில் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். வரும் சட்டசபை தேர்தலில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் செங்கோட்டையன் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் செங்கோட்டையனுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் செல்வன் அதிமுக சார்பில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் அண்ணன் மகன் மீண்டும் அதிமுகவுக்கு சென்றது திமுக, தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
-
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி!












Click it and Unblock the Notifications