திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட்
சென்னை: திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏவும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான செ.கு.தமிழரசன். "ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தது திமுக தான்" என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்தது இந்திய குடியரசுக் கட்சி. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன்.

2011ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற போது, தற்காலிக சபாநாயகர் பதவிக்கு செ.கு. தமிழரசன் மற்றும் அப்போது தேமுதிகவில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, செ.கு. தமிழரசனை தற்காலிக சபாநாயகராக்கினார்.
அதன்பிறகு 2016 சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார் செ.கு.தமிழரசன்.
தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சி இடம் பெறவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செ.கு.தமிழரசன் சந்தித்துப் பேசினார். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு செ.கு. தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பின் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஒரே கட்சி திமுக தான்.
திமுக கூட்டணியை ஆதரிப்பது அம்பேத்கர் இயக்கங்களின் தலையாய கடமை. அம்பேத்கரிஸ்டுகளை ஒருங்கிணைத்து திமுகவின் மகத்தான வெற்றிக்கு பாடுபடுவோம்." எனத் தெரிவித்துள்ளார் செ.கு.தமிழரசன்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications