அந்த கஷ்டம்.. தெய்வத்திற்கே கேட்டிருச்சு..சென்னை புறநகர் ரயில்களில் ஜூன் மாதம் முதல் புதிய வசதி
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் செல்லும் மெமு வகை ரயில்களில் ஜூன் மாதத்தில் இருந்து தலா நான்கு கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கு ரயில் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பெட்டியிலும் கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மற்ற ஊர்களை போல் இல்லை சென்னை.. மற்ற ஊர்களில் எல்லாம் மிஞ்சி போனால் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து வேலை செய்வார்கள். அதுவேமிகவும் அதிகபட்சமானதாக இருக்கும். அரசு ஊழியர்கள் வேண்டுமானால் அதிகபட்சம் 40 அல்லது 50 கிமீ தூரத்தில் இருந்து வந்து வேலை செய்வார்கள்.. சென்னையை மட்டும் அப்படி சொல்லிவிட முடியாது. சென்னையை சுற்றி சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் ரயில் மூலம் பயணித்து வந்து சென்னையில் வேலை செய்துவிட்டு, தினமும் மாலையில் வீடு திரும்புகிறார்கள்.

தினமும் 96 கிமீ தூரம் ரயிலில் பயணித்து செங்கல்பட்டு வழியாக காஞ்சிபுரத்தில் இருந்தும், 114 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருத்தணியில் இருந்தும், 85 கிமீ தூரம் பயணித்து அரக்கோணத்தில் இருந்தும் ரயில் வந்து செல்கிறார்கள்.இதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஏராளமான மக்கள் ரயிலில் வந்து சென்னையில் வேலை செய்து வருகிறார்கள். ஏன் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள உள்ளன. வேலூரில் இருந்து வேலைக்கு வருபவர்களும் உள்ளளனர்.
இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் இப்படி வேலைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பயணிக்கும் ரயில் பயணிகளுக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கம் உட்பட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு ஏதுவாக காட்பாடி– அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்துார், திருத்தணி – சென்ட்ரல், பித்ரகுண்டா – சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில் 12-க்கும் மேற்பட்ட மெமு வகை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் குறுகியதூர மின்தொடர் பயணிகள்ரயில்களாக இயக்கப்படுகிறது. இதில், கழிப்பறை வசதி இருக்கிறது. ஆனால், போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதேநேரம் பெரும்பாலான நேரங்களில் மெமு ரயில்களில் கழிவறைகள் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் இருக்கும் என்பதால், ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு கழிவறை பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை உள்ளது.
இதுபற்றி பரிசீலித்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், " தெற்கு ரயில்வேயில் மொத்தம் 12 மெமு வகை ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இது 9 மெமு ரயில்களில் தலா 4 கழிப்பறைகள் வசதியும், 3 மெமு ரயில்களில் தலா 2 கழிப்பறைகள் வசதியும் இருக்கிறது. இவற்றில் கூடுதலாக 4 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. ஜூன் மாதம் முதல் அனைத்து மெமுவகை ரயில்களிலும் தலா 4 கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனிடையே 8 பெட்டிகள் கொண்டமெமு ரயிலில் மொத்தம் 4கழிப்பறைகள் தான் வழங்கப் படும் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பிற்கு ரயில் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை போல ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்தபட்சம் 2 கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications