மோடியின், அன்பு, கருணை, அக்கறை.. ஓபிஎஸ் உருக்கமான கடிதம்.. இலவச பூஸ்டர் டோஸுக்கு பாராட்டு
இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தின் மூலம் மக்கள் மீதான பிரதமரின் அன்பு, கருணை, அக்கறை வெளிப்படுகிறது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17ஆம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு வழங்கிய பல பரிசுகளில் ஒன்றாகும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இதே போல இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தின் மூலம் மக்கள் மீதான பிரதமரின் அன்பு, கருணை, அக்கறை வெளிப்படுகிறது என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17ஆம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,இந்தியாவில் 18 -59 வயதுப் பிரிவினருக்கு ஜூலை 15-ம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவில் உள்ள 77 கோடி பேரில் 70 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர், அதாவது 72 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படாதது தான்.
Recommended Video
பூஸ்டர் தவணை தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போது எனது யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்தி இந்த வயதுப் பிரிவினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications