வெற்றிப் பயண திட்டம் குட் நியூஸ்.. மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் 100% இலவச பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது... இனி குளிர்சாதன பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவருக்கும் இந்த வசதி கிடைக்க உள்ளது.

Free Bus Vetri Travel Scheme

மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்

இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் வகை அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2026-27ம் நிதியாண்டிற்கான அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... அதன்படி, அரசு விரைவுப் பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் வகை அரசுப் பேருந்துகளில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவருக்கும் கட்டணம் கிடையாது.

இலவச பேருந்து பயணம்

மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயணத்தை அனுமதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை உத்தரவில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும், மாநகர மற்றும் நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.

ஆனால், குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. இந்தத் திட்டத்தின்கீழ், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, அவர்களுடன் பயணிக்கும் ஒரு துணையாளரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இந்த சலுகையைப் பெறுவதற்கு, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் இருப்பதை உறுதிப்படுத்தும், 16 இலக்க எண்ணைக் கொண்ட UDID அடையாள அட்டையைப் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் வைத்திருக்க வேண்டும்.

தமிழக அரசு அரசாணை

பேருந்து நடத்துநரிடம், அந்த அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே கட்டணமில்லாப் பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் துணையாளர்களின் பயணங்களைக் கணக்கிடும் வகையில், நடத்துநர்கள் இலவச பயணச் சீட்டு வழங்க வேண்டும்.

இதற்கான உரிய கணக்கீட்டு நடைமுறைகளை உருவாக்குமாறு போக்குவரத்துத் துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர, இதர மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 75 சதவீதப் பேருந்து கட்டணச் சலுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்காக, மொத்தம் 114 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டிருந்தது.

இதில், தற்போது 7.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான புதிய உத்தரவுகள் 2026ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+