அரசு தரும் இலவச சான்றிதழ்.. வீட்டில் இருந்தே மாதம் ரூ.20,000 சம்பாதிக்க 5 வழிகள் இதோ!
சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் நிறைய பேரிடம் டேலண்ட் இருந்தாலும், அந்த திறமையை அங்கீகரிக்கும் சரியான சான்றிதழ்கள் இல்லாததே வேலை கிடைப்பதில் பெரிய தடையாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் இலவச ஆன்லைன் பயிற்சிகளையும், அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றன. இந்தச் சான்றிதழ்களை வைத்து வீட்டில் இருந்தபடியே மாதம் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது.. இந்த சூப்பர் சான்ஸ் பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
அரசு வழங்கும் இதுபோன்ற இலவச சான்றிதழ்களை பெறுவதற்கு நீங்கள் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை. "ஸ்வயம்" (SWAYAM) மற்றும் "ஸ்கில் இந்தியா" (Skill India) போன்ற அரசு வெப்சைட்களில் கணினி இயக்க முறைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு உள்ளீடு (Data Entry) போன்ற பல பயிற்சிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

பயிற்சிகள் - அரசின் சான்றிதழ்கள்
இந்தப் பயிற்சிகளை முடித்துவிட்டு அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழைப் பெறும்போது, அது உங்கள் சுயவிவரக் குறிப்பிற்கு கூடுதல் பலத்தை தருகிறது. அதிலும் சிறு நகரங்களில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி சம்பாதிக்க முதல் வழி 'ஃப்ரீலான்சிங்' (Freelancing). அரசு அங்கீகாரம் பெற்ற டேட்டா என்ட்ரி அல்லது எம்.எஸ். ஆபிஸ் சான்றிதழ் உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலமாகப் பல நிறுவனங்களின் வேலைகளை எடுத்து செய்து கொடுக்கலாம்.
அடுத்த ஆப்ஷன், சிறு தொழில் தொடங்குவது.. அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் இருந்தால், சுயதொழில் தொடங்க வங்கிகளில் எளிதாகக் கடன் பெற முடியும்... இதன் மூலம் தையல் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றைத் தொழில்முறை ரீதியாக முன்னெடுத்துச் செல்லலாம்.
நல்ல வருமானம் - கார்ப்பரேட் நிறுவனங்கள்
மூன்றாவதாக, டிஜிட்டல் சேவை மையங்கள் கை கொடுக்கின்றன.. அரசின் சான்றிதழ் பெற்றவர்கள் தங்களின் வீட்டிலேயே ஒரு சிறிய கணினியை வைத்துக்கொண்டு, மக்களுக்குத் தேவையான ஆன்லைன் விண்ணப்பங்களைச் செய்து கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். இதற்கு அரசின் அனுமதி அல்லது பதிவு அவசியம் தேவை.
4வதாக கல்வி கற்பித்தல். அதாவது அரசின் சான்றிதழ் பெற்ற பாடங்களில் நீங்கள் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற முடியும். 5வதாக , கார்ப்பரேட் நிறுவனங்களில் கான்ட்ராக்ட் பணிகள் உதவுகின்றன.. பல பெரிய நிறுவனங்கள் அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்களைத் தற்காலிகப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தேர்வு செய்கின்றன.
சூப்பர் சான்ஸ் - கையில் ஒரு அரசு சான்றிதழ்
எனவே தேவைப்படுவோர் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். "படித்தால் மட்டும் போதாது, கையில் ஒரு திறமைக்கான சான்றிதழும் இருக்க வேண்டும்" என்ற அரசின் நோக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.
இந்த சான்றிதழ்கள் உங்கள் மீதான நம்பிக்கையை நிறுவனங்களிடம் அதிகரிக்கும். மே மாதம் விடுமுறை காலம் என்பதால், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி இந்த இலவசப் பயிற்சிகளில் சேர்ந்து சான்றிதழ் பெறலாம். கையில் ஒரு அரசு சான்றிதழ் இருந்தால், வருமானம் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை....!!!
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications