சென்னையில் பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் விலையும் செஞ்சுரி அடித்தது.!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 104 ரூபாய் 22 பைசாவாக விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 25 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104.22 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். எரிபொருளின் விலை அதிகரித்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

Fuel prices Today October 23, 2021: Petrol, diesel prices hike continues

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 85 டாலராக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 103.92 ரூபாய், டீசல் லிட்டர் 99.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104.22 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்களுடன் கடந்த சில தினங்களுக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் துறை ரீதியிலான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள், தூய்மையான செயல்திறன்மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+