பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உச்சம் - 100 ரூபாயை தாண்டியதால் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
Recommended Video
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை நடப்பாண்டின் ஜனவரியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதனால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐயும், டீசல் ரூ.95ஐயும் எட்டியது.
தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103ஐ தொட்ட நிலையில், திமுக அரசு மாநிலத்திற்கான வரி வருவாயில் ரூ.3ஐ குறைத்து ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. இதனால், மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.103ல் இருந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தினமும் 25 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது. தினசரி விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டியது. அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட நிலையில் சென்னையிலும் நேற்று பெட்ரோல் விலை சதமடித்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.01 ரூபாய், டீசல் லிட்டர் 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலையை ஏற்றி மீண்டும் ரூ.100க்கும் மேல் கொண்டு வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சற்றே ஆறுதல் அடைந்திருந்த மக்கள், பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications