சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மறுபடியும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை:சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவியது முற்றிலும் வதந்தி என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பிரபல தமிழ் ஊடகத்திற்கு பதில் அளித்துள்ளார்.

சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு தினமும் ஆயிரத்தை கடந்தே உள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.

Full lockdown again in Chennai? Chief Secretary Shanmugam explain

இதில் 12,591 பேர் குணம் அடைந்துவிட்டனர். 260 பேர் இறந்துவிட்டனர்.. 13,085 பேர் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் தான் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 15க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்ளுக்கு செல்லும் பலருக்கு கொரோனா தொற்று இருப்பத அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து யார் வந்தாலும் அக்கம் பக்கத்தினர் கூட உடனே தகவல் அளித்து எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறார்கள். சென்னையில் இருந்து வந்தாலே மக்கள் பீதிக்கு உள்ளாகிறார்கள்.

சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா.. மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் பேட்டி சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா.. மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் பேட்டி

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் கேட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக பரவும் தகவல்கள் வதந்தி மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

English summary
Chief Secretary Shanmugam said no Full curfew again in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X