அமித்ஷா காட்டிய ‘ரூட்’ டக்கென மாறிய பேச்சு.. ‘வந்தது இவ்வளவு’ அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்குப் பிறகு, அமித்ஷா போட்டுக் கொடுத்த ரூட்டில் தெளிவாகப் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கூட்டணி தொடர்பாகவும் மேலிட ஆலோசனையைப் பின்பற்றிக் கருத்துச் சொல்ல தொடங்கியுள்ளார் அண்ணாமலை. இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாஜகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் 2 முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து தமிழகம் வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

பாஜக தெற்கில் வெற்றிக் கொடியை நாட்ட முயற்சித்து வரும் நிலையில் அமித்ஷா சமீபத்தில் ஆலோசனையின்போது அமைத்துக் கொடுத்த பாதையில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள்.

தெற்கில் கால் ஊன்ற

தெற்கில் கால் ஊன்ற

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் பாஜகவால் வலுவாகக் கால் ஊன்ற முடியாத நிலை உள்ளது. திமுக, அதிமுக என இத்தனை ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் தாமரை மலர்வதில் சிக்கல் இருக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க தேசிய தலைமை முடிவெடுத்து, பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் பாஜக சார்பில் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது டார்கெட் சவுத் என்ற திட்டத்தை களம் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

வியூகம்

வியூகம்

இந்த திட்டத்தின் மோட்டோ, தெற்கில் பாஜக வலுவிழந்து இருக்கும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதுதான். அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் 8 தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக செயல்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், ஆட்களை சேர்க்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருந்தாலும் கூட இப்போதே வியூகங்களை வகுத்துச் செயல்பட்டால் தான் வெற்றி பெறலாம் என்ற கணக்கில் மத்திய அமைச்சர்கள் கூட அடிக்கடி தமிழகம் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

பாஜக டார்கெட்

பாஜக டார்கெட்

ஒரே மாதத்தில் தமிழகத்திற்கு 50 மத்திய அமைச்சர்கள் வர இருப்பதாகவும் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர்களின் வருகையால் தமிழகத்தின் மீது மேலிடத்திற்கு மிகுந்த அக்கறை இருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பது திட்டமாம். மத்திய அமைச்சர்களின் வருகை மற்றும் உள்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வருகையின் மூலம் தமிழக மக்களின் மனதை வென்று அடுத்த தேர்தலில் 8 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் டார்கெட் என்று கூறப்படுகிறது.

ஒரே நாளில்

ஒரே நாளில்

இந்நிலையில் தான் சமீபத்தில் தமிழகத்திற்கு ஒரே நாளில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வருகை புரிந்தனர். திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். அன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அடுத்த நாள் சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அமித்ஷா

அமித்ஷா

தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் கமலாலயத்தில் ஆலோசனையும் மேற்கொண்டார் அமித்ஷா. தமிழகத்தில் வலுவான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது எனவும் அதனை பாஜக நிரப்ப வேண்டும் எனவும் பாஜக அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உழைக்க வேண்டும், பூத் கமிட்டியை பலப்படுத்துவதற்கான வியூகங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், பாஜக கடந்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நிர்வாகிகளிடம் பேசியுள்ளார் அமித்ஷா.

வலுவான அஸ்திரம்

வலுவான அஸ்திரம்

மேலும், பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம், திமுக அரசின் ஒவ்வொரு குறைகளையும் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்திக்கொண்டே இருங்கள், மக்களைச் சந்தித்துக் கொண்டே இருங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடு முழுக்க முன்னெடுத்து நடத்துங்கள், உழைப்பிற்கான பலனை நிச்சயம் பெறுவீர்கள் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வரை தொடரும்

தேர்தல் வரை தொடரும்

அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு, பாஜகவின் பணிகளில் இன்னும் வேகம் எடுத்துள்ளது. நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் தான் உள்ளது. நேரம் வந்துவிட்டது. வீடு வீடாகச் செல்ல வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வரப் போகிறது. மக்களவைத் தேர்தல் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றார்.

இதோ வந்தாச்சே

இதோ வந்தாச்சே

பாஜக தொண்டர்கள் இதே உற்சாகத்தோடு அடுத்த 16 மாதங்களுக்கு செயல்பட்டால்தான், 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள். அதில் பலர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றார். மக்களவை தேர்தல் வரை போராட்டங்கள் தொடரும் என நேற்று கூறிய நிலையில், இன்றே அடுத்த போராட்டத்தை அறிவித்து விட்டார் அண்ணாமலை. தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

டெல்லி கொடுத்தது இவ்வளவு

டெல்லி கொடுத்தது இவ்வளவு

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வருடா வருடம் மாநில பேரிடர் பாதிப்பு நிதி வழங்குகிறது. தமிழகத்திற்கு இந்த வருடத்திற்கான பணம் 856 கோடி. அதில் முதல் தவணையாக 428 கோடி ரூபாய் வந்துள்ளது. அதனால், முதல்வர் அதிக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். அந்தவகையில், அமித்ஷா போட்டுக் கொடுத்த ரூட்டில் முன்னேறி வருகிறார் அண்ணாமலை என்கின்றனர்.

கூட்டணி பற்றியும்

கூட்டணி பற்றியும்

அதேபோல, அமித்ஷா வந்து சென்ற பிறகு கூட்டணி பற்றி தான் கருத்துகளை வெளிப்படுத்தும் பாணியையும் மாற்றிக் கொண்டுள்ளார் அண்ணாமலை. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசியதை அண்ணாமலை ஏற்றுக்கொண்டதை பாஜக மேலிடம் கண்டித்துள்ளது. நாம் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறோம். அதனால் அதிமுக தலைமையில் கூட்டணி எனச் சொல்வதை ஏற்பது சரியாகாது என அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

டெல்லி பார்த்துக்கொள்ளும்

டெல்லி பார்த்துக்கொள்ளும்

அதன்படியே, அண்ணாமலை, தற்போது தேர்தல் கூட்டணி பற்றி பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் குழு முடிவெடிக்கும் என்று தெரிவித்து வருகிறார். மேலும், தனது 25 எம்.பிக்கள் கவுண்டை விடாப்பிடியாகப் பேசி வருவதோடு, பலர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்பார்கள் என்றும் கூறி வருகிறார் அண்ணாமலை. இன்று கூட கண்டிப்பாக பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரும் என்று பேசியுள்ளார் அண்ணாமலை. அமித்ஷா வந்து சென்ற பிறகு அண்ணாமலையின் கேம் இன்னும் சூடுபிடித்துள்ளது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+