அனுமதியில்லாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது - மீறினால் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ள தமிழக போலீசார், அவ்வாறு மீறி சிலைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்ப்பிறை சதுர்த்தி தினத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்தன. பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு திரும்ப பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து முன்னணி அமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகளும், சென்னையில் 5 ஆயிரம் சிலைகளும் அமைத்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள் இந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை கூறியதாவது: எற்கனவே வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும். புதிதாக வேறு எந்த இடங்களிலும் சிலைகள் அமைக்கவோ, வழிபாடு நடத்தவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடமும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத்துறையிடம் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். குறிப்பாக, விநாயகர் சிலைகளை திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் எந்தவித ஆசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியாக நடக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications