ஏரியா ஏரியாவாக ரெய்டு விடும் அதிகாரிகள்.. சென்னையில் ஒரே வருடத்தில் நடந்த தரமான சம்பவம்.. கவனம்
சென்னை: சென்னை மாநகராட்சி, ஜனவரி 15 முதல் 17 வரையிலான காலகட்டத்தில், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில் கண்காணிப்பை மேற்கொண்டது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறிய 241 நபர்களுக்கு மொத்தம் ₹1.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடற்கரைப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் அபராதங்கள் வசூலிக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-இன் படி, ஒரு நபருக்கு அதிகபட்சமாக ₹5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜனவரி 14 முதல் 17 வரையிலான நான்கு நாட்களில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடற்கரைகளில் இருந்தும் மொத்தம் 233.88 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், பொது இடங்களிலும், கடற்கரைகளிலும் பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டுவது நடைமுறையில் உள்ள விதிகளின்படி முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
சென்னை அபராதம்
அதேபோல் சென்னை மாநகராட்சி (GCC) கடந்த ஓராண்டில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை விதிமீறல்களுக்காக கடைகள், குடியிருப்புகளுக்கு அபராதம் விதித்து ₹9.27 கோடி வசூலித்துள்ளது. கழிவு மேலாண்மை விதிகளை மீறிய 16,797 கடைகளிடமிருந்து மட்டும் ₹1.67 கோடி அபராதம் வசூலானது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வழங்கிய POS இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் அபராதம் வசூலாகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 10 நிலவரப்படி, 79,875 பரிவர்த்தனைகளில் 40,227 பொது சுகாதார விதிமீறல்களுக்காகவே பதிவானது. குடியிருப்புகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சட்டவிரோதமாக எரித்ததும் இதில் அடங்கும்.
பொது சுகாதாரத்திற்கு அடுத்தபடியாக, தூய்மைப் பராமரிப்பு விதிமீறல்கள் இரண்டாம் இடத்தில் உள்ளன. மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் தூய்மை விதிகளை மீறிய 29,687 நபர்களிடமிருந்து இந்த ஆண்டு ₹5.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை - கடுமையான அபராதம்
கட்டுமான, இடிப்பு கழிவு சட்டவிரோத கொட்டுதலுக்கு 3,447 பரிவர்த்தனைகளும், திடக்கழிவு எரிப்புக்கு 197 வணிக நிறுவனங்கள், 33 குடியிருப்பாளர்களும், குப்பைப் பிரிவின்மைக்கு 1,440 குடியிருப்பாளர்களும் அபராதம் செலுத்தினர்.
அண்டை வீட்டார் புகாரால் கொசு உற்பத்திக்குக் காரணமான 577 குடியிருப்பாளர்களும், 5 மருத்துவமனைகளும் அபராதம் செலுத்தினர். மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய 83 குடியிருப்பாளர்களும், பகுதியை சுத்தமாக வைத்திருக்கத் தவறிய 172 நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் தண்டிக்கப்பட்டனர்.
அபராதம் வசூலிக்க மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் பயன்படுத்தும் 1,225 சாதனங்களை சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், உதவிப் பொறியாளர் போன்ற கள அதிகாரிகள் இயக்குகிறார்கள். அக்டோபர் 2, 2024 அன்று தொடங்கப்பட்ட இம்முன்முயற்சி, அபராதங்களை வெளிப்படையாகவும் நிகழ்நேரத்திலும் பதிவு செய்கிறது.
கடந்த ஓராண்டில், POS-அடிப்படையிலான அமலாக்க நடவடிக்கைகளால் மொத்தமாக ₹9.27 கோடி அபராதம் வசூலானது. களப் பணிகளுக்கு நிறுத்தப்பட்ட 47 அமலாக்க வாகனங்கள் மூலம் சுமார் ₹1.12 கோடி வசூலானது. 57 வகையான புகார்களுக்கு அபராதம் பதிவானது. வளசரவாக்கம் மண்டலத்தில் அதிக விதிமீறல்கள் பதிவாகின.
சென்னை அபராதம் POS எந்திரம்
சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்
மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி அமல்படுத்தப்படும்
பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்
இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.
மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.
ஸ்பாட் அபராதம்
ஸ்பாட் அபராதம் விதிப்பதற்காக இன்னும் இரண்டு நாட்களில் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம், என்று GCC கமிஷனர் ஜே குமரகுருபரன் கூறி உள்ளார், வாடகைத் தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, அபராதத் தொகையை டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலையாக வசூலிக்க காகித சலான்கள் வழங்கப்பட்டன. இனி ஸ்பாட் பைன் போடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் சலான்கள் வழங்கப்பட்ட பிறகு பரிவர்த்தனைகளை முடித்து டேட்டாவை அப்லோட் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும். ஆனால் POS சாதனங்கள் நிகழ்நேர பரிவர்த்தனைகளை உடனுக்குடன் அப்லோட் செய்ய முடியும்.
சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications