இந்த தவறை மட்டும் செய்துடாதீங்க.. வீடு தேடி வரும் அதிகாரிகள்.. ரூ.4000 அபராதம்.. சென்னையில் கறார்!
சென்னை: சென்னையில் உள்ள மக்களுக்கு ரூ. 4000 வரை அபராதம் விதிக்கும் முக்கிய விதி ஒன்றை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
சென்னையில் தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சாலை பணிகள்: அதன்படி சென்னையில் ஒரு பக்கம் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளைக்குள் சென்னையில் இருக்கும் 150 கிமீக்கும் அதிகமான சாலைகளை மீண்டும் முறையாக போட முடிவு செய்துள்ளனர்.
அந்த சாலைகள் ஏற்கனவே போடப்பட்டு மெட்ரோ பணிகள், மழை நீர் வடிகால் அமைப்புகள் ஆகியவை காரணமாக உடைக்கப்பட்டன . சில இடங்களில் மின்சார வயர்கள் பதிப்பு காரணமாகவும் கூட இங்கே பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.
இந்த குழிகளை உடனே மூடி.. அங்கே சாலைகளை உறுதியாக போடும் முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் முடிய உள்ளது. ஒரு வாரத்திற்கு முன் இங்கே பணிகள் தொடங்கியது. தற்போது சாலை பணிகள் முடிய உள்ளது.
அபராதம் விதி: இன்னொரு பக்கம் புதிய விதமான அபராத விதி ஒன்றை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் ஏற்கனவே குப்பை கொட்ட கூடாது என்று உத்தரவு உள்ளது. சாலைகளில் போஸ்டர் ஓட்ட கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விதிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி ஒரு கட்டமாக சென்னை மாநகராட்சி புதிய அபராதம் விதிக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சட்டவிரோதமாக குப்பை மற்றும் பெரிய அளவு பழைய பொருட்களை சாலையில் அல்லது பொது இடங்களில் கொட்டினால் ஒரு டன்னுக்கு ₹4,000 அபராதம் விதிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக கட்டுமான நிறுவனங்கள், கடைகள் , நிறுவனங்கள் இது போன்ற குப்பைகளை போடுவது வழக்கம். இது போன்ற நிறுவனங்கள் சென்னையில் பல இடங்களில் குப்பைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னையின் சுகாதாரம், அழகு இதனால் கெடுகிறது. இது போன்ற குப்பைகளை நீக்குவதற்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
இந்த குப்பைகளை உடனே அகற்றாத பட்சத்தில் ஒவ்வொரு டன் குப்பைக்கும் 4000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக அரசு நிறுவனங்களும் இதேபோல் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஹவுசிங் போர்ட் மூலம் வீடுகள் கட்டப்பட்டு இடங்களில் குப்பைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கே பெரிய பெரிய குப்பைகள் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதை உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த குப்பைகளை அகற்றாத பட்சத்தில் இந்த முறை ரூ. 4000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றில் இருந்து இதற்கான சோதனைகள் செய்யப்படும். தெரு தெருவாக குப்பைகள் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கப்படும். அந்த குப்பைகளை சோதனை செய்து அபராதம் விதிக்கப்படும்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications