சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நிற நீதி".. நொறுங்கியது இன வெறி.. திரும்புகிறது வரலாறு.. ஜார்ஜ் கொலையும் இமாலய தீர்ப்பும்!

ஜார்ஜ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஜார்ஜை பிளாயிடை கொன்றது தொடர்பாக, கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்... இதையடுத்து, நிறவெறிக்கு எதிரான போராட்டத்துக்கு ஒரு நிமிமதி பிறந்துள்ளது.. !

Recommended Video

    உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு… டெரிக் சாவ்வின் குற்றவாளி என தீர்ப்பு!

    ஒரு கொலை சம்பவம் உள்நாட்டு போராக வெடிக்கும் என்று இந்த உலகமே எதிர்பார்த்திருக்காது.. தெருத்தெருவாக புரட்சிகளும், போராட்டங்களும் வெடிப்பதை அமெரிக்காவே மலங்க மலங்க விழித்து பார்த்தது..!

    இரவு நேர ஊரடங்கு: சென்னையில் புறநகர் ரயில்கள் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை ரத்து இரவு நேர ஊரடங்கு: சென்னையில் புறநகர் ரயில்கள் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை ரத்து

    1968ல்- நடந்த போராட்டங்கள் போலவே தான் மீண்டும் ஒரு நிறவெறி போராட்டம் ஜார்ஜ் விஷயத்தில் நடந்தது.. கறுப்பினத் தலைவரான, மார்ட்டின் லுாதர் கிங் கொல்லப்பட்டபோது, அமெரிக்காவில் இதுபோலதான் பெரிய அளவில் வன்முறைகள் தாண்டவமாடின.. போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.. மார்ட்டின் லூதர் கிங்-க்கு பிறகு கறுப்பின மக்களின் போராட்டம், ஜார்ஜ் கொலைக்கு வெடித்தது. அடிமைமுறை ஒழிப்பு மட்டுமின்றி, நிறநீதிக்காக வீதியில் குவிந்தனர்..!

    ஆவேசம்

    ஆவேசம்

    நாளுக்கு நாள் மக்களின் கோபாவேசம் குறையவில்லை.. கொதிப்பும் அடங்கவில்லை.. மக்களை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்தான் முடியவில்லை.. மிளகு பொடியை கூட மக்கள் மீது தூவினார்கள் போலீஸ்.. ஒன்றும் மசியவில்லை... ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் மக்கள் திரண்டுள்ளது சரித்திர நிகழ்வாக பார்க்கப்பட்டது..!

     மிரட்டல்

    மிரட்டல்

    போராட்டக்கார்களை பார்த்து டிரம்ப் டென்ஷன் ஆனதுதான் மிச்சம்.. மிரட்டல் விடுத்தார்.. ராணுவத்தை கொண்டு அடக்க போகிறேன் என்று எச்சரித்தார்.. போராடியவர்களை நாய்கள் என்று திட்டினார்.. இறுதியில், இவரது 2வது மனைவியும், மகளும் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததை பார்த்து டிரம்ப் அதிர்ந்துதான் போனார்.

     கோழை

    கோழை

    எண்ணற்ற அமெரிக்கர்கள், வெள்ளை மாளிகையை நோக்கி பேரணியாக வருவதை பார்த்து ஒரு கோழையை போல பதுங்கு குழியில் ஓடிப்போய் ஒளிந்து கொள்வதைதவிர டிரம்ப்பால் எதுவுமே செய்ய முடியவில்லை.. இன்று டிரம்ப்பின் ஆட்சி அடியோடு தகர்வதற்கு ஜார்ஜ்ன் கொலையே மிக முக்கியமான காரணியாக அமைந்துவிட்டது... ட்ரம்பின் சர்வாதிகாரத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி தேடப்பட்டுவிட்டது! உலக வரலாற்றை திருப்பி போட மக்கள் ஒன்று திரண்டதன் அடையாளமாகவும் இது உருவெடுத்தது.!

     நீதிபதிகள்

    நீதிபதிகள்

    ஜார்ஜ் கொலை வழக்கு கடந்த 3 வாரங்களுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது.. ஜார்ஜ் கழுத்தில் 9 நிமிஷங்களுக்கு மேலாக, முழங்காலை வைத்து அழுத்திய வீடியோ ஆதாரம்தான் இந்த வழக்கில் அசைக்க முடியாத தூணாக நின்றது.. முன்னாள் போலீஸ் அதிகாரி டெரெக் சாவினை விடுதலை செய்வதா? அல்லது ஜெயிலுக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு 12 நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது...

     விசாரணை

    விசாரணை

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற காலம் முழுவதும் இவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்ல, இவர்கள் வயதில் குறைந்தவர்களாக இருந்தனர்.. அதிகம் பேர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.. கூடுதல் எண்ணிக்கையில் பெண்களும் இருந்தனர். இப்போது முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த தீர்ப்பின்படி குறைந்தது 45 வருடங்களை அவர் சிறையிலேயே கழிக்க நேரிடும்..

     நீதி

    நீதி

    அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.. தீர்ப்புக்கு பிறகு ஜோ பிடன் பேசிய வார்த்தைகள் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. "குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய செய்ய உள்ளோம். அமைப்பு ரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்," என்று அதிபர் சொல்வதில் இருந்தே, நிறவெறிக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்ற ஆறுதல் பிறந்துள்ளது...

     கமலா ஹாரிஸ்

    கமலா ஹாரிஸ்

    "அமெரிக்காவில் காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ஜார்ஜ் ஃப்ளாய்ட் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்" என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது, சமூக நீதி இனி பிழைத்துவிடும் என்ற நம்பிக்கையை துளிர்க்க வைத்துள்ளது..

     நிறவெறி

    நிறவெறி

    அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான நிறவெறி என்பது இன்று, நேற்றல்ல.. இது பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது.. லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்த நிறவெறி ஓரளவு குறைந்ததே தவிர முற்றிலும் ஒழியவில்லை.. அமெரிக்கர்களின் மரபணுவிலேயே இந்த நிறவெறி ஊறி போய் இருக்கிறது.!

     வீடியோ

    வீடியோ

    ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு, ஒரு கறுப்பினப் பெண் ஆவேசத்துடன் ஒரு வீடியோ பேசியிருந்தார், "என்னை கொன்று போட்டாலும் கவலையில்லை, நாளைக்கு என்னுடைய குழந்தைகளாவது இந்த தெருவில் சுதந்திரமாக நடமாடட்டும்" என்று பொங்கியிருந்தது இன்று வீண் போகவில்லை. வெள்ளை இனத்தவர்களுக்கு இணையாகக் கறுப்பினத்தவர்கள் நடத்தப்பட வேண்டும் என்று மார்டின் லூதர் கிங் கனவு நிறைவேறிவிட்டதாக ஒரேயடியாக, நாம் சொல்லி விட முடியாது.. ஆனால் அதற்கான துவக்க புள்ளியை ஜார்ஜ் கொலை தீர்ப்பு அழுத்தமாக இன்று பதிவு செய்துள்ளது.. நிறவெறி தோல்கள் உரிந்து.. உதிர்ந்து.. கழண்டு கீழே விழ தொடங்கி உள்ளது!

    English summary
    George Floyd: Justice Public celebrate Chauvin verdict
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X