சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆத்தாடி என்னா ஹைட்டு.. யாரு இந்த "கடா"?

Google Oneindia Tamil News

சென்னை: சுல்தான் படத்தைப் பார்த்த பலரும் ஹீரோ கார்த்திக்கு அடுத்து, உத்துப் பார்த்து அடேங்கப்பா என்று ஜெர்க் ஆனது நம்ம "கடா"வைத்தான்.

கை விரலால்.. நெஞ்சுல கோலம் போட்டு.. மயிலிறகால் வருடி சிலிர்க்க வைத்த தர்ஷா கை விரலால்.. நெஞ்சுல கோலம் போட்டு.. மயிலிறகால் வருடி சிலிர்க்க வைத்த தர்ஷா

யார் இந்த கடா.. இணையத்தில் வைரலாகி விட்டது இந்தப் பெயர்.. மைக்கேல் மதன காமராஜன் என்று கமல் நடித்த ஒரு படம் பல வருடங்களுக்கு முன்பு வந்தது. அதில் பீம் பாய் பீம் பாய் என்று ஒரு கேரக்டர் வந்து போகும்.

Giant Zanjeer goes viral

கிட்டத்தட்ட அதே பாணி கேரக்டர்தான் இந்த கடாவும். பீம் பாய் கேரக்டருக்குப் பிறகு இந்த கடா தான் ரசிகர்களால் அதிக அளவில் பேசப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் இல்லாமல் பின்னர் ஓடிடியிலு் வெளியாகி வெற்றி பெற்றது.

Giant Zanjeer goes viral

இத்திரைப்படத்தில் கார்த்தியின் மெய்க்காப்பாளர் அதாவது பாடிகார்டக வந்தவர்தான் இந்த கடா. அதாவது இவரது ஒரிஜினல் பெயர் ஜெயன்ட் ஜான்ஜீர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்.

இவர் 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் பலரும் விரும்பிப் பார்க்கும் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ நெட்வொர்க்கில் இடம் பெற்றுள்ளார். தோற்றமோ 7 அடி 2 இன்ச். எடையோ 154 கிலோ. இவர் சுல்தான் படத்திற்குப் பிறகு ரொம்ப பாப்புலாராகி விட்டார். இவரை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வேறு.

Giant Zanjeer goes viral

இணையத்தில் வைரல் ஆகி வரும் மீண்களில் ஒன்று இவரைப் போல ஒரு நண்பன் இருந்தால் நல்லா இருக்கும்ல என்பது. படத்தில் ஒரு வசனம் யோகி பாபு பேசியிருப்பார்.. ராமருக்கு ஹனுமான் கூட இவ்வளோ விசுவாசமாக இல்ல.. ஆனால் சுல்தானுக்கு நீ இப்படி இருக்கியே டா என்ற வசனம் மக்களை வெகுவாக கவர்ந்தது.

இணையத்தில் இவர் அடுத்து எந்த தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஆர்வபமும் எல்லோரிடமும் நிலவுகிறது.

எழுத்து: கார்த்தி

English summary
Giant Zanjeer aka Gada of Sultan movie fame has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X