‛‛அப்பாவாக பார்க்கிறோம்''... விஜய் பற்றிய சர்ச்சைக்கு மேடையிலேயே வேல்முருகனுக்கு மாணவி தந்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா இன்று 3ம் கட்டமாக நடைபெற்றது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி நடிகர் விஜயை விமர்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்து பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு அவரது கட்சி தயாராகி வருகிறது. நடிகர் விஜய் இன்னும் சில நாட்களில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.

girl-student-slams-velmurugan-for-this-remark-about-tvk-vijay-award-ceremony

இதற்கிடையே தான் நடிகர் விஜய் கடந்த 2023ம் ஆண்டு முதல் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். இந்த ஆண்டு ஏற்கனவே 2 கட்டமாக விருது வழங்கும் விழா முடிந்துவிட்டது.

3வது கட்டமாக கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. மாணவ-மாணவிகளை விஜய் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகனை விமர்சனம் செய்தார். வேல்முருகன் சமீபத்தில், ‛‛இரண்டு கிராம் தங்கத்திற்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கிறார்கள். மாணவிகளின் தோள் மீது கைபோட அனுமதிக்கிறார்கள்.

இதுதான் தமிழர்களின் மரபா? இதற்கெல்லாம் பெற்றோர் எப்படி சம்மதிக்கிறார்கள். ஒரு கூத்தாடி முன் பிள்ளைகளை நிற்க வைக்கவேண்டாம்'' என்று கூறியிருந்தார். விஜயின் பெயரை கூறாமல் வேல்முருகன் அவரை விமர்சனம் செய்திருந்தார். வேல்முருகனின் இந்த விமர்சனத்துக்கு கடும் தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இப்படியான சூழலில் தான் வேல்முருகனை, நடிகர் விஜய் முன்னிலையில் மாணவி விமர்சனம் செய்தார். அந்த மாணவி பேசும்போது, ‛‛நாமக்கல் கிழக்கு மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வருகிறேன். இந்த பரிசை விஜய் சாருக்கு நன்றி. சில வீடியோக்களை நான் பார்த்தேன். தோள் மீது விஜய் கைபோடுகிறார் என்று பேசும் வீடியோ எல்லாம் வந்தது.

நாங்கள் எப்படி உணர்கிறோம் என்றால் எங்கள் அப்பாவா, அண்ணாவா, எங்களின் உயிராக நாங்கள் நினைக்கிறோம். இதை அவரது குடும்பத்தில் உள்ள ஒருவரை இப்படி சொல்வரா? அப்படி சொல்லக்கூடாது. நாங்கள் இருக்கிறோம். உயிராக இருக்கிறோம். தேங்க்யூ அப்பா'' என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+