கறுப்பின மக்களின் அடையாளம்.. கால்பந்து விளையாட்டின் மன்னன்.. முடிவுக்குவந்த பீலேவின் வாழ்க்கை பயணம்!
சென்னை: கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கால்பந்து உலகின் கடவுள் போல் மதிக்கப்பட்ட மாபெரும் வீரன், தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறான். பிரேசிலின் சொத்தாக அறிவிக்கப்பட்ட பீலே, உலக மக்களின் சொத்தாகவும், கறுப்பின மக்களின் நம்பிக்கையாக மாறிய பயணத்தை பார்க்கலாம்.
"பீலே" கால்பந்து விளையாட்டை பற்றி எதுவும் தெரியாத சாதாரண மனிதனுக்கும் தெரிந்த பெயர். எல்லைகள் கடந்து, நாடு கடந்து, மதம், மொழி, இனம், நிறம், ஏன் விளையாட்டு கடந்தும் கொண்டாடப்படும் ஜாம்பவான் தான் பீலே.
1958க்கு முன்னதாக பிரேசிலில் கால்பந்து விளையாட்டு இருந்தது. ஆனால் கால்பந்து விளையாட்டு கலாச்சாரமாக இல்லை. அடுத்த 12 ஆண்டுகளில், பிரேசில் பற்றி பேசினால் கால்பந்து மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும். அந்த மாற்றத்தை மக்களின் மனதிலும், மூளையிலும் உருவாக்கியவர் பீலே.

பெயர்க்காரணம்
Edson Arantes do Nascimento இதுதான் பீலேவின் நிஜப்பெயர். உள்ளூரில் நண்பர்களோடு கால்பந்து விளையாடிவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது, "நான் பீலே மாதிரி கோல் கீப்பிங் நிப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் வேறு ஒரு அணியின் கோல் கீப்பர் Bile என்பவரின் பெயரை 'பீலே' என்று தவறாக உச்சரிக்க, இவரை 'பீலே' என்று அழைத்து பலரும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். பீலே என்று அழைத்ததற்காக தன் வயது சிறுவனை அடித்து, பள்ளியில் இருந்து எட்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவமானத்தை வென்று, உலகத்தையே அதே பெயரில் பீலே என்று அழைக்க வைத்துள்ளார்.

பிரேசிலின் சொத்து
1970க்கு பின் சர்வதேச கால்பந்து உலகம் பிரேசிலை சுற்றியே சுழன்றது. 1970ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதுடன், மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனை படைத்தார். ஆங்கிலத்தில் The Last Dance என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. அந்த உலகக்கோப்பையுடன் கால்பந்தில் இருந்து பீலே ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் பிரேசில் நாட்டின் சொத்தாக பீலே அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டார்.

கறுப்பின மக்களின் நம்பிக்கை
ஆனால் பீலே பிரேசிலின் சொத்து மட்டுமல்லாமல், கறுப்பின மக்களின் சொத்தாகவும் மாற தொடங்கினார். உண்மையில் நிறவெறியும், இனவெறியும் அதிகமாக இருந்த காலத்தில், கறுப்பின மக்களின் கடைசி வெளிச்சமாக பீலே உருவெடுத்தார். கால்பந்தை விளையாடுவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம், கீழ்நிலையில் இருந்து உச்சாணி கொம்பிற்கு ஏறலாம் என்று மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியவர். அவரோடு கறுப்பின மக்களையும் சேர்த்து உச்சத்திற்கு அழைத்து சென்றார் பீலே.

பீலேவால் நிறுத்தப்பட்ட போர்
இவ்வளவு ஏன் 1967ம் ஆண்டு பீலேவின் ஆட்டம், 48 மணி நேரத்திற்கு ஒரு உள்நாட்டு போரையே நிறுத்தியது என்றால் நம்ப முடிகிறா? நைஜீரியா சிவில் வாரை பீலேவால் 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்க முடிந்தது. பீலே கால்பந்து விளையாடுவதை பார்க்கப்பதற்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆயுதங்களுடன் மைதானத்தை ரசிகர்களும், போரில் ஈடுபட்டவர்களும் சுற்றி நின்று பார்த்தனர். பணம், புகழ், மரியாதை என அனைத்தையும் பெற்ற அனைவருக்குமான மனிதனாக மாறினார் பீலே.

சிறந்த வீரர் பீலே
கடந்த 40 ஆண்டுகளில் ஜாம்பவான் வீரர்களாக கருதப்படும் ரொனால்டோ, மெஸ்ஸி, பெக்காம், ரொபோனா, ரிவால்டோ ஆகியோரின் அனைத்து திறமைகளையும் ஒருங்கே பெற்றே முன்னோடி வீரர் பீலே. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பீலேவை போன்று பலம் வாய்ந்த வீரர்களை கால்பந்து விளையாட்டில் எண்ணிவிடலாம். கால்பந்து விளையாட்டு உலகம் முழுவதும் விளையாடப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் பீலே.

19 ஆண்டுகள்
15 வயதிலேயே சாண்டோஸ் கிளப்பின் சீனியர் அணியில் இடம்பிடித்து, கால்பந்து உலகில் ஓர் அற்புத என்ட்ரி கொடுத்து, 19 வருடங்கள் பிரேசிலில் தன் கால்பந்து வித்தைகளைக் காட்டியவர் பீலே. இவர் குறித்து பிரேசில் கவிஞர் ஒருவர் எழுதிய வார்த்தைகள் இவை: "பீலேவை போல் ஆயிரம் கோல்கள் அடிப்பது அற்புதம் அல்ல. பீலேவை போல் ஒரு கோல் அடிப்பதே அற்புதம்". இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், பிரேசில் கால்பந்து வீரன் ஒவ்வொருவரும், பீலேவை அறியாமல் கால்பந்து விளையாட்டை ஆட மாட்டார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications