கோகுல்ராஜ் செல்போன் அதன் பிறகும் பயன்பாட்டில் இருந்தது.. குற்றம்சாட்டப்பட்டோர் வைத்த முக்கிய வாதம்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸார் பல்வேறு நடைமுறைகளை சரிவர பின்பற்றவில்லை என குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாக கோகுல்ராஜ் கொலை வழக்கின் குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், கோகுல்ராஜின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும், அது பயன்பாட்டில் இருந்ததாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். இவரும் சுவாதி என்பவரும் காதலித்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் கடந்த 2015ல் ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு கோகுல் ராஜ், சுவாதி மற்றும் சுவாதியின் தோழி ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது கோகுல்ராஜ் கோவிலில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாளம் அருகே அவரது உடல் கிடந்தது.

 ஆயுள் தண்டனையை எதிர்த்து மனு

ஆயுள் தண்டனையை எதிர்த்து மனு

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தனர்.

"ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை"

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனுக்களானது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.தங்களுக்கு எதிராக திரட்டப்பட்டதாக கூறப்படும் ஆதாரங்களை காவல்துறை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், கோகுல்ராஜின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் பயன்பாட்டில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

"நடைமுறையை பின்பற்றவில்லை"

மேலும், தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களையும், அர்த்தநாரீஸ்வரர் கோயில் வீடியோ பதிவான ஹார்ட் டிஸ்க்கையும், நடைமுறைகளை பின்பற்றாமல் காவல்துறை கையாண்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஹார்ட் டிஸ்க்கில் இருந்த பதிவுகளை யார் கையாள்வது, யார் எடுக்க சொன்னது, யார் எடிட் செய்வது, யார் அழித்தது என்பது தொடர்பான எந்த விவரங்களையும் காவல்துறை முழுமையாக விசாரிக்கவில்லை என்றும், சிசிடிவி கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

 பிப்.3-க்கு தள்ளிவைப்பு

பிப்.3-க்கு தள்ளிவைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை தரப்பில் வாதங்களை முன்வைப்பதற்காகவும், குற்றவாளிகள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைப்பதற்காகவும், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 3-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+