உலகிலேயே தங்கம் மிக குறைவான விலை இங்கு தான்.. கப்பலில் எல்லாமே தங்க கட்டிகள்.. மதிப்பு பல கோடி

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: தங்கம் விலை இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.இதன் காரணமாக வரியில்லாமல் தங்கத்தை கடத்துவது பல்வேறு நாடுகளில் முயற்சிகள் நடக்கிறது.எங்கு எல்லாம் தங்கம் விலை மிக குறைவாக கிடைக்கிறதோ அங்கிருந்து இறக்குமதி செய்வது ஒருபுறம் எனில் அந்நாட்டு அரசுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக கடத்துவதும் நடக்கிறது..அப்படி சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ள ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு கடத்தப்பட இருந்த 63 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் விலை இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹8,858 ஆக இருக்கிறது. இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,120 ஆகவும் இருக்கிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை 64,960 ரூபாய் என்கிற அளவில் விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு பவுன் 70 ஆயிரத்து 864 ரூபாய் என்கிற அளவில் விற்பனையாகிறது.. 100 கிராம் 24 கேரட் சுத்த தங்கம் இன்றைய விலை மதிப்பின் படி 8 லட்சத்து 85 ஆயிரத்து 800 ஆக உள்ளது.ஒருகிலோ 24 கேரட் தங்கம் சுமார் 88லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் என்றால், ஒரு கிலோ 81 லட்சம் என்கிற அளவில் உள்ளது.

Gold china japan

இந்த விலை நிலவரம் எல்லாம் சென்னையில் தான்.. இந்தியா முழுவதும் இதே அளவில் தான் கிட்டத்தட்ட இருக்கிறது. ஆனால் ஹாங்காங் (சீனா), துபாய், சவுதி அரேபியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா போன்ற வேறு சில நாடுகளில் தங்கம் விலை மிக குறைவாக இருக்கிறது. இதில் உலகின் மிகவும் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் பகுதிகளில் முக்கியமானது ஹாங்காங்.

ஏனெனில் உலகிலேயே மலிவான விலையில் தங்கம் வாங்க கூடிய பகுதியாக ஹாங்காங் (சீனாவின் தன்னாட்சி பகுதி) இருக்கிறது. தங்க நாணயங்கள் வழங்க இங்கு ஏராளமான வங்கிகள் உள்ளன . இதேபோல் ஹாங்காங்கில் தங்கத்தை வாங்க கூடிய பல இடங்கள் உள்ளன. குறிப்பாக சொல்வது என்றால் ஹேங் செங் வங்கி, இது தங்க பொன் கட்டிகள், நாணயங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கு முக்கியமான இடமாக உள்ளது.

இதேபோல் நகைக்கடைக்காரர்கள் அல்லது பிற டீலர்கள் மூலமாகவும் தங்கத்தை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும் என்கிறார்கள். இதன் காரணமாக ஹாங்காங்கில் தங்கம் வாங்குவதை உலகின் பல்வேறு நாடுகள் வாடிக்கையாக வைத்துள்ளன. சிலர் தங்கத்தை ஹாங்காங்கில் வாங்கி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கடத்துவது அதிகமாக நடக்கிறது.

சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாக இருக்கும் ஹாங்காங்கை பொறுத்தவரை சர்வதேச வர்த்தக பொருளாதாரத்தில் ஹாங்காங் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஹாங்காங் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல்கள் மூலமாக தங்கம் கடத்தப்பட இருப்பதாக அந்நாட்டு சுங்க இலாகா துறையினருக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் செல்லவிருந்த கப்பலுக்குள் அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கிருந்த பெட்டிக்குள் சோதனை நடத்தியபோது தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடித்தனர். அதில் கடத்தப்பட இருந்த 63 கிலோ எடைக்கொண்ட 63 தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 மாலுமிகளை ஹாங்கா சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.52 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+