நகைகள், நிலம் பறித்த சூர்யாவின் ஜாலி வாழ்க்கை.. சென்னை புறநகர் பங்களாவில் போட்ட ஆட்டம்.. வாக்குமூலம்
சென்னை: தங்க நகை, வீடு, நிலம், ரொக்க பணத்துக்காக, திருமணமாகாத பெண்களுக்கு வலை வீசி மோசடி செய்தவர் சூர்யா.. இதற்காகவே மேட்ரிமோனியில் பதிவு செய்து, பல பெண்களை நாசம் செய்திருக்கிறார். சமீபத்தில் இவரை அண்ணா நகர் போலீசார் கைது செய்திருந்த நிலையில், தற்போது சிறையில் உள்ளார். 50-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்ததாக கூறப்படும் சூர்யாவிடம், போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசாரிடம் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை சூளைநகர் பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவர் 2 மாதங்களுக்கு முன்பு அண்ணாநகர் மகளிர் போலீஸில் சூர்யா மீது புகார் தந்தார்..

''தமிழ் மேட்ரிமோனி மூலம் சூர்யா என்பவர் எனக்கு அறிமுகமாகி பின்னர் என்னை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து உல்லாசம் அனுபவித்தார்.
பிறகு நாம் இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என்று சொல்லி என்னிடம் இருந்து 8 லட்ச ரூபாய் மற்றும் 9 சவரன் நகை, லேப்டாப் மற்றும் காஸ்ட்லி செல்போன் போன்றவற்றை வாங்கி கொண்டார். ஆனால், என்னை திருமணம் செய்வதற்கு மறுத்துவிட்டார். எனவே, சூர்யா மீது நடவடிக்கை வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அண்ணாநகர் மகளிர் போலீஸில் நர்ஸ் புகார்
நர்ஸ் தந்த இந்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை ஆரம்பமானது. அதில், மேட்ரிமோனி மூலம் பல பெண்களை சூர்யா ஏமாற்றி மோசம் செய்தது தெரியவந்தது.
நெல்லையை சேர்ந்த சூர்யா, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாக அனைவரிடமும் ஏமாற்றி வந்துள்ளார்.. திருமணம் செய்வதாக சொல்லி நெருங்கி பழகி, அவர்களின் நம்பிக்கையை பெற்று, உடலுறவு வைத்து கொள்வாராம். பிறகு பணம், நகைகளை பறித்து கொண்டு ஏமாற்றி விடுவாராம். இப்படி 50க்கும் மேற்பட்ட பெண்களை சூர்யா பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
சூர்யா மீது பெண் வன்கொடுமை மற்றும் குண்டாஸ் உட்பட 7 வழக்குகள் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் போலீஸ் பாதுகாப்புடன் அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சூர்யாவை ஆஜர்படுத்தினார்கள்..
நன்னடத்தை பத்திரம் - வட்டாட்சியர்
அப்போது வட்டாட்சியர் சூர்யாவிடம், ''நன்னடத்தை பத்திரம் வழங்கப்படும். அந்த பத்திரத்தின்படி ஒழுங்காக இருக்கவேண்டும். பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.. நன்னடத்தை பத்திரம் என்றால் என்ன தெரியுமா?" என்று கேட்டு, நன்னடத்தை பத்திரத்தை சூர்யாவுக்கு படித்து காண்பித்து, இதன்படி வாழ வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
இதனிடையே, சூர்யாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அண்ணாநகர் மகளிர் போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "சிறையிலுள்ள சூர்யா என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பல லட்சம் ஏமாற்றி உள்ளார். பெண்களிடம் ஏமாற்றிய நகைகள், பல லட்சத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளார் என்று விசாரணை செய்யவேண்டும்' என்று தெரிவித்திருந்தனர்.
சென்னை புறநகர் பகுதி
இதையடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, புழல் சிறையில் இருந்து சூர்யாவை அண்ணாநகர் மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சூர்யா போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலமாக கூறியிருக்கிறார்.
அதில், "மேட்ரிமோனி மூலம் அறிமுகமான பெண்களை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை சொல்லி, லாட்ஜூக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்தேன். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள், சென்னை புறநகர் பகுதிகளில் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்துள்ளேன். சொந்தமாக இடம் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தேன்.
சொகுசு பங்களாவில் உல்லாசம்
பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்கு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன். மசாஜ் சென்டருக்கு சென்று ஆடம்பரமாக பணம் செலவு செய்தேன். நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றி வந்தேன்" என்று தெரிவித்துள்ளாராம்.
தொடர்ந்து சூர்யாவிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல மோசடிகள் வெளிவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தங்க நகைகள், பணத்தை பறித்த சூர்யாவின் அப்பா, மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்!!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications