சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட்காவுக்கு மேலும் ஓராண்டு தடை! அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! சிக்கினால் என்ன தண்டனை தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : 2011ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட தடை கடந்த மே 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O: குட்கா விற்றால் குண்டர் சட்டம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவுஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O: குட்கா விற்றால் குண்டர் சட்டம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

குட்கா தடை

குட்கா தடை

இந்த சட்டத்தின் படி, எனவே, இத்தகைய போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மேலும் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓராண்டு தடை நீட்டிப்பு

ஓராண்டு தடை நீட்டிப்பு

குட்கா, பான்மசாலா ஒழிப்புக்கென தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்லப்பட்டு வருவதோடு, கைது , பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

அரசிதழின் அரசாணை

அரசிதழின் அரசாணை

குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தலுக்கு மேலும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட தடை கடந்த மே 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில், அப்போது முதலவராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்களது அதிமுக ஆட்சியில் தான் இந்த தடை முதன்முறையாக விதிக்கப்பட்டது.

கஞ்சா 2.0 வேட்டை

கஞ்சா 2.0 வேட்டை

இந்த அரசாணையின் படி, " தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா ஆகிய பொருள்களை தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கி வைப்பது ஆகியவை குற்றமாகும்" என கூறப்பட்டுள்ளது. இதனை மீறினால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குட்கா விற்பவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசின் காவல்துறை கஞ்சா 2.0 என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The Government of Tamil Nadu has issued a one-year ban on Gutka, Pan Masala and tobacco products in Tamil Nadu after the ban, which had been in place since 2011, came to an end on May 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X