சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் ஜூன் 14 முதல் பள்ளிக்கு வர உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: அரசு/ அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 14 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு கூறப்பட்டுள்ளதாவது : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணையின்படி, கொரோனா நாடு முழுவதும் பரவலாக இருந்ததன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட மாட்டாது என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

government schools headmasters and staffs to come to the school from June 14

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டியுள்ளது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பு அறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 14 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு பள்ளிக்கல்வி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

English summary
The Government of Tamil Nadu has directed the headmasters and office staffs of government / government aided schools to come to the school from June 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X