"டெல்லி போட்ட போடு".. ஆளுநர் ரவி திடீரென எடுத்த முக்கிய முடிவு.. ஆஹா மனமாற்றம்.. ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று சிறையில் இருக்கும் 322 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மாநில ஆளுநர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது இல்லை. தங்களுக்கு இருக்கும் அரசு கடமைகளை செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள் என்ற புகார் பல்வேறு மாநிலங்களில் வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் மீதும் இதே போன்ற புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி முன் மொத்தம் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

ஆளுநர் ரவி
மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா தொடங்கி விலங்குகள் பல்கலைக்கழக, சட்டத்துறை பல்கலைக்கழக உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மசோதாக்கள் உள்ளன. இதில் 10 மசோதாக்கள் பல்கலைக்கழக நியமன மசோதாக்கள்தான். அதாவது துணை வேந்தரை ஆளுநர் அல்லாமல் முதல்வர் நியமிக்கும் மசோதாக்கள். இந்த 10 மசோதாக்களும் கிடப்பில் உள்ளன. அதிலும் மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா 1020 நாட்களாக கிடப்பில் உள்ளது.

மசோதா
இது போக ஆன்லைன் சூதாட்ட மசோதாவும் கிடப்பில் உள்ளது. மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்ட சட்ட பல்கலைக்கழக மசோதாவும் இதேபோல்தான் கிடப்பில் இருக்கின்றது. இந்த மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் ஆளுநர் தட்டி கழிக்கிறார். அவரின் செயல் மிகவும் தவறானது என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புகார் வைத்துள்ளனர். இது அனைத்தையும் மொத்தமாக லிஸ்ட் போட்டு திமுக கூட்டணி தங்கள் மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தேதி அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிடப்பில் இருந்தது
அதேபோல் உச்ச நீதிமன்றமும் ஆளுநர் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்காமல் இருப்பதை விமர்சனம் செய்தது. முன்னதாக பேரறிவாளனை விடுதலை செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதில் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. விடுதலை பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது தவறு. அமைச்சரவை எடுத்த முடிவை அவர் ஏற்று இருக்க வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்ய உரிய பரிசீலனைக்குப் பின் மாநில அரசு முடிவு செய்திருக்கும். ஆனால் ஆளுநர் இதை ஏற்காமல் இருந்தார். 33 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு.

அரசியல் சாசனம்
அரசியல் சாசனத்தின் 161-வது மாநில அரசுக்கான சிறப்புரிமையை கொண்டது; ஆளுநர் இதற்கு கட்டுப்பட்டவர்; மீறி நடப்பது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதை அடிப்படையாக வைத்து பேரறிவாளவனை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதன் அடிப்படையில், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உட்பட மற்ற 6 பேரையும் கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. 6 பேரின் நன்னடத்தையை அடிப்படையை வைத்தும் இவர்களை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

ஸ்டாலின்
இந்த இரண்டு தீர்ப்புமே ஆளுநருக்கு எதிரானது. ஆளுநர் சரியாக செயல்படவில்லை என்பதால் உச்ச நீதிமன்றமே தலையிட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் இதற்காக 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஆளுநருக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில்தான் தற்போது ஆளுநர் ரவி 322 கைதிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்து இருக்கிறார்.

பரிந்துரை
பொதுவாக அண்ணா பிறந்தநாள், காந்தி பிறந்த நாள் போன்ற தலைவர்கள் பிறந்த நாள்களில் போது சிறை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி கடந்த வருடம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 509 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். தமிழ்நாடு அரசு சார்பாக அளிக்கப்பட்ட பரிந்துரைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார்.

விடுதலை
கிட்டத்தட்ட 1 வருடமாக இந்த பரிந்துரை மீது ஆளுநர் ரவி நடவடிக்கையே எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்ட இரண்டு நாட்களில், 322 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். உச்ச நீதிமன்றம் ஆளுநரை கடிந்து கொண்ட நிலையில் ஆளுநர் ரவி இந்த விடுதலைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்கள் இந்த அறிவிப்பால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்











Click it and Unblock the Notifications