சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு..நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அதிர்ச்சி அளிக்கின்றன - திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அதிர்ச்சியளிக்கும் உண்மைகளையும், கடுமையான பரிந்துரைகளையும் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை , வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

    Sterlite Protest | Thoothukudi துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தனிநபர் ஆணையம் அறிக்கை சொல்வது என்ன?

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட "நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்" கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் அளித்தது.

    ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அலட்சியம் - அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அலட்சியம் - அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை

    சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதைஇன்னும் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    துப்பாக்கிச்சூடு

    'துப்பாக்கிச் சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டது' என்றும் 'கலைந்து ஓடிய மக்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள்' என்றும், 'இதில் உயர் போலிஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார்கள்' என்றும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஃபிரண்ட்லைன் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆணையம் உறுதி

    ஆணையம் உறுதி

    இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இல்லாமல் இவ்வாறு அந்த ஆங்கில இதழ் இச்செய்தியை வெளியிட வாய்ப்பில்லை. அத்தகைய நம்பகத் தன்மைக்குரிய ஒரு ஏடு என்பதால், அச்செய்தியைப் புறம்தள்ள இயலவில்லை.
    சுடலைக்கண்ணு என்ற போலீஸ் கான்ஸ்டபிள் தொலைதூரத்தில் இருந்து சுடும் எஸ். எல். ஆர் துப்பாக்கியைக் கொண்டு பல பேரை சுட்டுக் கொலை செய்திருப்பதை ஆணையம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன்

    மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன்

    அதுபோலவே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன் தனது பாதுகாவலர் ஸ்டாலின் என்பவரின் கைத்துப்பாக்கியை எடுத்து 25 வயது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றிருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த உருப்படியான முயற்சியையும் செய்யவில்லை என்பதையும் ஆணையம் சுட்டிக் காட்டி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறது.

     சட்ட நடவடிக்கை தேவை

    சட்ட நடவடிக்கை தேவை

    சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் கொண்ட சேகர், கண்ணன் மற்றும் சந்திரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்த எளிதாக அனுமதி வழங்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டியுள்ள ஆணையம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

    கொலை வழக்கு பதிவு செய்க

    கொலை வழக்கு பதிவு செய்க

    அதிர்ச்சியளிக்கும் உண்மைகளையும், கடுமையான பரிந்துரைகளையும் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை , வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தூத்துக்குடி படுகொலை

    தூத்துக்குடி படுகொலை

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர்கள் சிலருக்கும் இருந்த நெருக்கமான உறவே இத்தகைய படுகொலை நடப்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது என ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. அந்த அம்சம் குறித்து விசாரணை ஆணையம் ஏதும் தெரிவித்திருக்கிறதா என்பதைத் தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும். அது தொடர்பான அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தாமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    The Tamil Nadu government should take immediate action without further delay on the report of Justice Aruna Jagatheesan Commission, which contains shocking facts and strict recommendations regarding the Sterlite firing incident. Thirumavalavan said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X