தீபாவளித் திருநாள்: புதிய வெற்றிப் பாதையை அமைக்கட்டும் - டிடிவி தினகரன், கேஎஸ் அழகிரி வாழ்த்து
தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தமிழக மக்களுக்கு தனது தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும். பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும். வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டுவரட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கே எஸ் அழகிரி வாழ்த்து
இது தொடர்பாக கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு மதத்தினர் பண்டிகைகளைக் கொண்டாடும் போது மற்ற மதத்தினர் வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து கொள்வது நம் நாட்டின் கலாச்சாரம். இதில் தீபாவளிக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 19 மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்த தீபாவளித் திருநாள் நல்வழிகாட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம். அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும் அதர்மம் அழிந்து தர்மம் நிலைக்க தீபாவளித் திருநாள் பாதை அமைத்து கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக அடித்தளமாக தீபாவளி திருநாள் அமையட்டும்.
தீமை மறைந்து நன்மை பெருகும் என்று நம்பிக்கையோடு ஏழை மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் தீமைகளை ஒன்றுசேர்ந்து ஒழித்துக் கட்டுவோம் என இந்நாளில் சபதம் ஏற்போம். அறியாமை என்னும் இருளைப் போக்கி வெற்றியையும் மகிழ்ச்சியையும் தீபாவளி கொண்டு வரட்டும். அனைவரும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்நாள் வழங்கட்டும்.
Recommended Video
ஓராண்டுக்கும் மேலாக பொருளாதார சீரழிவு, வேலை இழப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு என பல அவதாரங்களை எடுத்து மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கு முடிவுகட்டும் நாளாக தீபாவளி அமையட்டும். அனைவரும் வாழ்க்கையிலும் இன்முகம் ஒளிரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications