அட.. பேட்ட பட தியேட்டரிலேயே திருமணம் செய்த ரஜினியின் 'தீவிர' ரசிகர்.. சரி ஸ்வீட் சாப்பிடுங்க!
பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவை நடத்தி உள்ளார்.
Recommended Video

சென்னை: பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவை நடத்தி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பேட்ட படம் இன்று அதிகாலை வெளியானது. காலை முதல் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.
அதிகாலையே ரசிகர்களை தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர். இதனால் பல திரையரங்குகள் திருவிழா போல காட்சி அளித்து இருந்தது.

திருமணம்
பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவில் நடத்தி உள்ளார். இவரின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. சென்னை ராயப்பேட்டை அருகே இருக்கும் உட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த திருமணம் நடந்து இருக்கிறது.

ரஜினி ரசிகர்
இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தியேட்டருக்கு வெளியேயே மேடை அமைத்து திருமணம் நடந்தது. ஐயர் வரவழைக்கப்பட்டு, சடங்குகள் எல்லாம் செய்து முறையாக இந்த திருமணம் நடந்தது.

நிறைய உறவினர்கள்
நிறைய உறவினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தம்பதியினர் ஒன்றாக பேட்ட படம் பார்க்க போவதாக கூறியுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

சாப்பாடு அளித்தனர்
இந்த நிலையில் திருமணம் முடிந்து அங்கேயே எல்லோருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. தியேட்டருக்கு வெளியேயே மக்களுக்கு வரிசையில் சாப்பாடு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications