சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஜாக்கிரதை".. தோட்டத்துக்கு ஏன் போகல.. எடப்பாடியை பாருங்க.. சசிகலாவுக்கு பறந்த அட்வைஸ்.. யார் தெரியுமா

சசிகலாவுக்கு அவரது சகோதரர் திவாகரன் முக்கிய அறிவுரை தந்துள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா & எடப்பாடி குறித்த செய்தி ஒன்று, தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இருக்கிற பிரச்சனை போதாதென்று இந்த தலைவலி வேறா? என்று சசிகலா ஆதரவாளர்கள் நொந்து கொண்டுள்ளனராம்.. அப்படி என்ன நடந்தது?
சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர் திவாகரன்... சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு திவாகரனும், தினகரனும் அதிமுகவில் நீடித்து வந்த நிலையில், இவர்களுக்கு அதிமுகவின் மேல்மட்ட தலைவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கவும், அதிமுகவில் இருந்து விலகிவிட்டனர்.

அமமுகவை தினகரன் தொடங்கினார் என்றாலும், இந்த கட்சி தொடங்கப்பட்டதில் தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. அதனால், திவாகரன் தனியாக பிரிந்து சென்று "அண்ணா திராவிடர் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்தார்.

 செம ட்விஸ்ட்.. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில்.. ஓ.பி.ரவீந்திரநாத் ஒரே போடு! செம ட்விஸ்ட்.. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில்.. ஓ.பி.ரவீந்திரநாத் ஒரே போடு!

ரிலீஸ்

ரிலீஸ்

ஆளுக்கொரு பக்கம் கட்சி நடத்தி வந்தாலும், அதிமுகவுடன் இணைவதற்கான பேச்சை இவர்கள் எடுக்கவே இல்லை.. அதேசமயம் தினகரன் - திவாகரன் இடையே இணக்கமும் நடக்கவில்லை.. சசிகலா ஜெயிலில் இருந்ததால் அதற்கான பேச்சும் எழவில்லை என்றாலும், சசிகலா ரிலீஸ் ஆகி வெளியே வந்தபிறகும் இவர்கள் இணைப்பு நிகழவில்லை. அதேசமயம், சசிகலாவிற்கு மறைமுக ஆதரவாகவே இருந்து வருகிறார்..

 ஓவர்.. ஓவர்

ஓவர்.. ஓவர்

இதனிடையே, சமீபகாலமாகவே, அதிமுகவுக்குள் பிரச்சனை வெடித்து வந்து கொண்டிருந்த நிலையில், வழக்கத்தைவிட அதிகமாக, சசிகலாவை சீண்ட ஆரம்பித்துவிட்டது எடப்பாடி தரப்பு.. அதிலும் ஜெயக்குமார் கொஞ்சம் ஓவராகவே போய்க் கொண்டிருப்பதை கண்டு திவாகரன், கடுப்பாகி விட்டாராம்.. அதிமுகவில் உள்ள சில சோர்ஸ்கள் மூலம் தனது கோபத்தையும் ஜெயக்குமாருக்கு பாஸ் செய்து, சசிகலா விஷயத்தில் "அடக்கி வாசிக்க" சொன்னதாகவும் செய்திகள் கசிந்தன.

 சறுக்கல் + கண்ணீர்

சறுக்கல் + கண்ணீர்

இறுதியில், அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்ட நிலையில், திவாகரன் தன்னுடைய அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக அறிவித்தார்... அதிமுக சறுக்கிய போதெல்லாம், தூக்கி நிறுத்திய சசிகலா தற்போது சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லையே மேடையிலேயே கண்ணீர் விட்டு பேசினார்.. அவர் அழுவதை பார்த்து, சசிகலாவும் கண்ணீர் விட்டார்.. இந்நிலையில்தான், திவாகரன் - சசிகலா குறித்த ஒரு செய்தி மீண்டும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

 ராமாவரம் தோட்டம்

ராமாவரம் தோட்டம்

சசிகலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் கடந்த 18-ந்தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.. ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் இருக்கும் காதுகேளாத-வாய்ப்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவும் நல உதவிகளும் வழங்கி கொண்டாடுபவர் அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வைத்தியநாதன்.

தோட்டம்

தோட்டம்

சசிகலா சிறையில் இருந்த போதும் அதே கொண்டாட்டங்களை நடத்தியவர். சசிகலாவின் தீவிர விசுவாசி.. இந்த வருடம் அவரது பிறந்தநாளின் போது எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள காதுகேளாத வாய்ப்பேச இயலாத ஏழைக் குழந்தைகளுடன் கொண்டாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விசுவாசிகளும், அதிமுகவின் சசிகலா ஆதரவாளர்களும் விரும்பி, சசிகலாவுக்கு அழைத்துள்ளனர். ஆனால், சசிகலா கலந்து கொள்ள மறுத்துவிட்டதுடன், வேளச்சேரியில் உள்ள சொகுசு மாளிகையான ஃபீனிக்ஸ் மாலில் குடும்ப உறவுகளுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

 ஃபீனிக்ஸ மால்

ஃபீனிக்ஸ மால்

இது ராமாவரம் தோட்டம் உட்பட, அதிமுகவிலும் சசிகலா குடும்பத்தின் மற்ற உறவுகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதுவும், ராமாவரம் தோட்டத்துக்கு குழந்தைகளை சசிகலா புறக்கணித்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம். பெரிய அளவில் இந்த சர்ச்சை பரவ, சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் அவரது சகோதரர் திவாகர். அப்போது, "ஃபீனிக்ஸ் மாலில் பிறந்தநாளை கொண்டாடியது தவறல்ல.. ஆனால், எம்ஜிஆர். தோட்டத்தை நீ புறக்கணிச்சிருக்கக் கூடாது...

 சின்ன தப்பு - அக்கா

சின்ன தப்பு - அக்கா

நாமெல்லாம் அரசியலில் இருக்கிறோம். சின்ன தப்பு செய்தாலும் அது பெரிதாக ஊதப்படும்... அதுவும் நீங்கள் எப்போது தப்பு செய்வீர்கள் என்று காத்துக் கிடக்கிறது ஒரு கூட்டம். அதுக்கு நீங்க இடம் தந்தது மாதிரி ஆகி விட்டது... ஏழைக் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அதன் பிறகு நீங்கள் ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றிருந்தால் கூட தப்பாக பார்க்கப்பட்டிருக்காது. இப்போ, இதை பழனிச்சாமி ஆட்கள் வேகம் வேகமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்... இனியாவது இந்த மாதிரி சர்ச்சை வராமல் கவனமுடன் இருங்கள்" என்று தன்னுடைய அக்காவிற்கு அட்வைஸ் பண்ணினாராம் திவாகரன்.

English summary
Has Divakaran acted in favor of VK Sasikala and What is the main advice given by Divakaran? சசிகலாவுக்கு அவரது சகோதரர் திவாகரன் முக்கிய அறிவுரை தந்துள்ளாராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X