• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"க்ளைமாக்ஸ்".. ஆசை ஆசையாய் இருந்தாரே எடப்பாடி.. எல்லாமே தலைகீழாக மாறுதே.. பணிந்ததா பாஜக.. அப்ப அவர்?

எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு டெல்லியில் உயர்வதாக சொல்கிறார்கள்
Google Oneindia Tamil News

சென்னை: நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு அரசியல் களத்தில் எகிறி வரும் நிலையில், பாஜக மேலிடமும் எடப்பாடியை முழுமையாக அங்கீகரிக்க தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.. இதற்கு என்ன காரணம்?

ஜி - 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதேபோல, பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால், அதிமுகவில் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை..

பச்சைக் கொடி காட்டிய டெல்லி.. தமிழ்நாடு அரசு இல்லத்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி? ஏன் என்னாச்சு? பச்சைக் கொடி காட்டிய டெல்லி.. தமிழ்நாடு அரசு இல்லத்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி? ஏன் என்னாச்சு?

 குஷி எடப்பாடி

குஷி எடப்பாடி

இது தொடர்பான வழக்குகளும் தேர்தல் ஆணையத்திலும், கோர்ட்களிலும் உள்ளன.. அந்த வழக்குகளில் இறுதி முடிவும் வந்து சேரவில்லை.. அதனால், அதிமுகவுக்கு யார் தலைவர் என்றே இன்னும் தெரியவில்லை. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக இடைக்கால பொது செயலாளர் என்று குறிப்பிட்டு, மத்திய பாஜக அரசு, ஜி - 20 மாநாடு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

 பூஸ்ட் சான்ஸ்

பூஸ்ட் சான்ஸ்

இந்த அழைப்பானது, பல்வேறு அதிர்வலைகளை தமிழக அரசியல் களத்தில் உருவாக்கி வருகிறது.. முதலாவதாக, எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு பூஸ்ட் கிடைத்தது போல அமைந்துள்ளது.. இத்தனை நாளும் தன்னை பாராமுகத்துடன் நடத்தி வந்த நிலையில், அழைப்பு விடுத்தது என்பதே மிகப்பெரிய விஷயமாக எடப்பாடி தரப்பால் பார்க்கப்படுகிறது.. மறறொரு புறம், "இடைக்கால பொதுச்செயலாளர்" என்ற அடைமொழியை தந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, தன்னை உண்மையான அதிமுக என்பதை மத்திய அரசு கருதுவதாகவும் புலப்படுகிறது.

 வாயே திறக்கல

வாயே திறக்கல

காரணம், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை பாஜகவில் யாருமே ரசிக்கவில்லை.. அதை ஏற்கவுமில்லை.. இதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்லலாம்.. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றார் அண்ணாமலை. இதுகுறித்து ட்விட்டரில் அண்ணாமலை, "மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு பாஜக சார்பில் சந்திப்பது எனக்கு கிடைத்த மரியாதை. நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிக்கு நன்றி கூறிவிட்டு அவரை வாழ்த்தினேன். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்தேன்" என்றே குறிப்பிட்டு இருந்தார்.

 ரவீந்திரநாத் குமார்

ரவீந்திரநாத் குமார்

அதுமட்டுமல்ல, பொதுக்குழு அன்று இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது, முதல்நபராக வாழ்த்து சொன்னது பாமக தலைவர் அன்புமணிதான் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.. இத்தனைக்கும் அதிமுக மீது விமர்சனங்களை அன்புமணி முன்வைத்து வந்த நிலையில், இந்த வாழ்த்தை முதல் நபராக கூறியிருந்தார்.. ஆனால், என்டிஏ கூட்டணியில்தான் இன்னமும் அதிமுக இருக்கிறது என்று சொல்லி கொள்ளும் யாருமே, எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லாதபட்சத்தில், நேற்றைய தினம் டெல்லியில் இருந்து வந்திருந்த அழைப்பானது, எடப்பாடிக்கான பச்சை சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.

 லட்டு சான்ஸ்

லட்டு சான்ஸ்

அதுவும் ஜெ.நினைவுநாளின்போது, இப்படிப்பட்ட அங்கீகாரம், எடப்பாடிக்கு மேலிடம் தந்த லட்டு போலவே கருதப்படுகிறது.. இந்த அழைப்பானது, இன்னொரு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அழைப்பு வந்தாலும், உண்மையான அதிமுக என, ஓபிஎஸ்ஸை மத்திய அரசு கருதவில்லையோ என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது..

 திருமாவளவன்

திருமாவளவன்

இந்நிகழ்வுக்கு ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு தந்திருக்க வேண்டும்.. அதாவது, தர்மர், ரவீந்திரநாத்குமார் என பாராளுமன்றத்தில் எம்பிக்கள் உள்ள கட்சி என்ற முறையிலும், ஒருங்கிணைப்பாளர் என்ற புள்ளியிலும் ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.. ஆனால், அழைப்பு இல்லை.. திருமாவளவனுக்கும் அழைப்பு தந்திருக்க வேண்டும்.. ஆனால், அழைப்பு இல்லை.. ராஜ்யசபா பேனரில் இருப்பதால் வைகோவுக்கும் அழைப்பு தந்திருக்க வேண்டும.. ஆனால், அழைப்பு தரவில்லை.. அதனால், எடப்பாடி பழனிசாமிக்கான முக்கியத்துவத்தை தந்துள்ளதால், பாஜக அவரை ஏற்கவே செய்கிறது என்றே சொல்லலாம்..

பூஸ்ட்

பூஸ்ட்

அதேசமயம், வெறும் அழைப்பை மட்டுமே வைத்து, எடப்பாடியை முழுமையாக பாஜக ஏற்றுக்கொண்டுவிடும் என்றும் சொல்வதற்கில்லை.. பிரதமர் மோடியை பொறுத்தவரை ஓபிஎஸ், எடப்பாடி என இருவரையுமே இப்போது சமமாக வைத்தே பார்க்கிறார்.. மோடியாவது பரவாயில்லை, இருவரையும் ஒரே தராசில் வைக்கிறார்.. ஆனால், அமித்ஷாவோ, "தமிழ்நாட்டில் வெற்றிடம்" என்று சொல்லி அதிமுகவை மொத்தமாகவே டேமேஜ் செய்துவிட்டு போய்விட்டார். எனவே, மோடி, அமித்ஷா என்ற இரு தலைவர்களின் அரசியலில் இருந்தும், இந்த நிகழ்வை பார்க்க வேண்டி உள்ளது.. எப்படி பார்த்தாலும், இடைக்கால பொதுச்செயலாளர் என்று மேலிடம் கூப்பிட்டது, எடப்பாடிக்கு ஒருவகையான பூஸ்ட்தான்..!

English summary
Has Edappadi Palanisamys value to BJP increased and Will Delhi leaders not recognize OPS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X