சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீனவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு.. அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மீன் பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீன் பிடித் தடைக்காலத்தை 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக அதிகரித்த போதும் 5,000 ரூபாய் மட்டுமே உதவி தொகையாக வழங்கப்படுவதாகவும், இதனை அதிகரிக்க கோரி மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

hc asks report from govt on hiking financial assistance to tn fishermen

இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணை வந்த போது, மனுத்தாரர் தரப்பில் அஜரான வழக்கறிஞர், தற்போது தமிழக அரசு சார்பில் ஒரு நாளைக்கு 81 ரூபாய் என இருக்கும் உதவித்தொகையை 500 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது ஹைகோர்ட்தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது ஹைகோர்ட்

இதையடுத்து தமிழக மீனவர்களுக்கு உதவித்தொகையை அதிகரிப்பது தொடர்பாக அக்டோபர் 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல சென்னை மெரினாவை அழகுப் படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை எலியட் கடற்கரைக்கும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பான அறிக்கையை அக்டோபர் 16க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

முராரி ஆணையம் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த கோரிய வழக்கில், தேசிய மீன் பிடி தொழில் குறித்த புதிய கொள்கையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞர், கால அவகாசம் கோரினார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அக்டோபர் 16 ல் பதிலளிக்கவில்லை என்றால், மத்திய மீன்வளத் துறை அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

English summary
Madras HC has asked a report from TN Govt on hiking financial assistance to the state fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X