சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களுக்கேற்ற தண்ணீர் கேன் தேவை.. வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஹைகோர்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் 20 லிட்டர் தண்ணீர் கேனின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த தீபா ஸ்ரீ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

hc rejects woman petitioners plea on water canes

அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாள முடியவில்லை என்றும் அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல எனவும், மனுதாரர்களின் இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க தபால் நிலையமும் அல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது மார்க்கெட்டில் உள்ள தண்ணீர் கேன்களை ஆண்களே கூட தூக்கி கையாளுவது சற்று சிரமமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madras HC rejected a woman petitioner's plea on water cane design.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X