ஸ்டாலின் மேஜையில் இருக்கும் ரிப்போர்ட்.. தவெக பற்றிய சர்வே.. விஜய்க்கு இது தெரிஞ்சா.. ட்விஸ்ட்தான்!
சென்னை: ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தவெக குறித்த முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமற்ற கருத்து கணிப்பு என்று கூறப்படுகிறது.
இந்த சர்வே தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டியுள்ளது. அதாவது அந்த கட்சிக்கு நகர்புறத்தில் உள்ளது போல கிராமப்புறத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்று இந்த சர்வேயில் கூறப்படுகிறது.

தவெக சர்வே
சர்வே முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் ஆதர்வாவு உள்ளது. மாநகராட்சி மற்றும் நகர்ப்புற மையங்களில் கட்சிக்கு சுமார் 10 முதல் 15 சதவீதம் வாக்காளர் ஆதரவு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள்.. நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளதாக இந்த சர்வே கூறுகிறது. அங்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இன்றும் பெரிய நகரங்களுக்கு வெளியே வசிப்பதால், கிராமப்புறங்களில் தமிழக வெற்றி கழகத்தின் குறைந்த ஆதரவு.. அந்த கட்சிக்கு ஒரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, சட்டமன்றத் தேர்தல்களில் கிராமப்புற, புறநகர் வாக்காளர்கள் முடிவை தீர்மானிக்க கூடிய சக்தியினராக இருக்கின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகம் இதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றி கழகம் சர்வே
ஆனால் இது அதிகாரபூர்வமற்ற கருத்து கணிப்பு என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மூத்த அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த அவசரக் கலந்துரையாடலுக்குக் காரணம், தி.மு.க.வின் think tank எனப்படு சர்வே குழு ஒன்று நடத்திய ஒரு புதிய உட்கட்சி ஆய்வுதான். இந்த ஆய்வு ஆளுங்கட்சிக்கு சாதகமான அதே சமயம் கவலைக்குரிய சில முடிவுகளை கலவையாகத் தந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு உள்ளதாம். அதாவது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும். கண்டிப்பாக மெஜாரிட்டி தனியாக கிடைக்கும் என்று சர்வேயில் மகிழ்ச்சி செய்தி கூறப்பட்டு உள்ளதாம்.
இது தலைமைக்கு மிகவும் ஊக்கமளிக்கும் பகுதியாகும். ஆயினும், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது கட்சியின் வாக்கு சதவீதம் குறையக்கூடும் என்றும் அதே ஆய்வு எச்சரிக்கிறது. இந்த சரிவு கட்சியின் ஒட்டுமொத்த பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் சவால்களை உருவாக்கலாம்.
கட்சியின் வாக்கு சதவிகிதம் குறையும்
இந்த வாக்குச் சரிவுக்கு முக்கியக் காரணம், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை என்றும் கூறப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. விஜய்யின் அரசியல் அறிமுகம் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவரது ரசிகர் பட்டாளமும் இந்த மாற்றத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி குறிப்பிட்ட ஒரு கட்சியை மட்டும் பாதிக்கவில்லை என்பதை தி.மு.க. குழு கண்டறிந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. மற்றும் பிற சிறு பிராந்தியக் குழுக்கள் உட்பட அனைத்து முக்கியக் கட்சிகளின் வாக்குத் தளத்தையும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கவர்ந்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க இயலாவிட்டாலும், அனைத்துக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கிகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஓட்டையை உருவாக்க முடியும். திமுகவின் வாக்குகளிலும் கையை வைக்கும் தவெக என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறதாம்.












Click it and Unblock the Notifications