நியோ வைரஸ் பற்றி பீதி வேண்டாம்.. மக்களே பாதுகாப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்- மா.சுப்பிரமணியன்
நியோ கோவ் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தற்போது பரவி வரும் புதிய வகை வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது புதிதாக சார்ஸ் - கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோ-கோவ் என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் வூஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது டெல்டா, ஓமிக்ரான் போல கொரோனா வைரஸின் உருமாற்றம் கிடையாது எனவும், மாறாக சார்ஸ் கோவிட் குடும்பத்தை சேர்ந்த புத்தம் புதிய கொரோனா வகை வைரஸ்தான் நியோ-கோவ் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில் நியோ கோவ் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தற்போது பரவி வரும் புதிய வகை வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் 20வது கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அவருடன் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் இருந்தனர்.

மக்களுக்கு தடுப்பூசி
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இதுவரை 9,39,87,972 பேர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் எனவும், இந்த முகாம் முலம் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும், 18 வயதுக்கு மேல் உள்ள முதல் தவணை தடுப்பூசியை 5,20,29,899 பேர் அதாவது 88.19% பேர் செலுத்தி உள்ளனர் எனவும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 3,90,21,718 அதாவது 67.41%) பேரும் செலுத்தி உள்ளனர் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 33.46 லட்சம் தகுதி பெற்றுள்ளனர் எனவும், அதில் 25,91,788 77.46% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றார்.

அரசு முனைப்பு
பூஸ்டர் டோஸ் 10ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட நேற்று வரை 4,48,394 பேர் கண்டறியபட்டனர் எனவும், அதில் 3,44,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், 97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 100% செலுத்திய 2669 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் உள்ளன என்றார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் சார்பில் உயர் ரத்த அழுத்தம் சிகிச்சைக்கு 19 லட்சம் பேருக்கும், 13.15 லட்சம் பேர் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். பூஸ்டர் டோஸ் 10ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட நேற்று வரை 4,48,394 பேர் கண்டறியபட்டனர் எனவும், அதில் 3,44,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், 97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 100% செலுத்திய 2669 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் உள்ளன என்றார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் சார்பில் உயர் ரத்த அழுத்தம் சிகிச்சைக்கு 19 லட்சம் பேருக்கும், 13.15 லட்சம் பேர் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நியோ கோவ் வைரஸ் அச்சம்
பேலியேட்னிவ் கேர் சிகிச்சை 1,71,068 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய வகை நியோ கோவ் வைரஸ் பரவி வருகிறது எனவும், வவ்வால் முலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது என தெரிவித்த அமைச்சர், ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு டேப் வழங்க திட்டம் இருந்தது எனவும், இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்கு பிறகு மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications