ராமநாதபுரம், நாகையில் இடியுடன் கனமழை... தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குக் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 20 நாட்களாகவே தீவிரமாக பெய்து வருகிறது. அபரிமிதமாக கொட்டித்தீர்த்த கனமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலந்து வருகிறது.
அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சில தினங்கள்மட்டுமே வெயிலடித்த நிலையில் மீண்டும் தொடர்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய கனமழை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக
ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மதுரை, புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மதுரை, புதுக்கோட்டையில் மழை
நாளைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை
26ஆம் தேதியன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

2 நாட்களுக்கு கனமழை
27ஆம் தேதியும் 28ஆம் தேதியும் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை திருப்பத்தூரிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

28ஆம் தேதி வரை மழை
28ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை கனமழை பெய்ய உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் பற்றி எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும் புவியரசன் கூறியுள்ளார்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications