அதிகாலையிலிருந்து செம மழை.. டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சி.. சென்னைக்கும் மழை இருக்கு!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டம்
அதன்படி தற்போது டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது .

தேனி எப்படி
தேனி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மதுரையில் லேசாக சாரல் மழை பெய்து வருகிறது.

நீலகிரி ஊட்டி
நீலகிரி மற்றும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. கடலூரில் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை.

சென்னை எப்படி
இந்த மழை காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை இன்று மாலை மழை பெய்யும். இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications