சென்னை டூ குமரி வரை.. அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை விடாது.. 24 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை முதல் குமரி வரை 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் வானிலை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை மற்றும் தென்காசியில் இடையிடையே கனமழையும் தொடர்ச்சியாக மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகம் முழுக்க சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
24 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, தேனி. திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, இண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று
சென்னையில் இன்று (17-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (18-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
* நாலுமுக்கு (இருநெல்வேலி) 16.
* ஊத்து (இருநெல்வேலி) 15.
* காக்காச்சி (திருநெல்வேலி) 14.
* மாஞ்சோலை (திருநெல்வேலி) 11.
* கழுகுமலை (தூத்துக்குடி) 9.
* தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்). களக்காடு (திருநெல்வேலி), மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) மணமேல்குடி (புதுக்கோட்டை) 7 செமீ.
* சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), மிமிசல் (புதுக்கோட்டை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), நம்பியாறு அணை (திருநெல்வேலி), சேத்தியாத்தோப்பு (கடலூர்). நாங்குனேரி (திருநெல்வேலி) தலா 6.
* பாலமோர் (கன்னியாகுமரி). மண்டபம் (ராமநாதபுரம்). கொடுமுடியாறு (திருநெல்வேலி), மணிமுத்தாறு (இருநெல்வேலி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்) சேர்வலாறு அணை (திருநெல்வேலி) கடனா அணை (தென்காசி) பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருக்குவளை (நாகப்பட்டினம்), மண்டலம் 10 வடபழறி (சென்னை) தலா 5 செமீ மழை பெய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications