தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இடியுடன் கனமழை பெய்யும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

நாளைய தினம் செப்டம்பர் 2ஆம் தேதியன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
நேற்றைய தினம் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 13 செமீ மழையும் திண்டுக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோர பகுதிகளில் தனுஷ்கோடி முதல் குளச்சல் வரை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரக்கூடும் என்றும் வானிலை மைய அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications