சென்னையில் இன்றும் வெளுத்து வாங்கிய மழை.. 2 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்.. வெதர்மேன் கணிப்பு!
சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் பலத்தமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் மேகமூட்டம் காணப்பட்ட போதிலும் மழை வராமல் ஏமாற்றியது.தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
குறிப்பாக சென்னை நகர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. வெப்பநிலை குறைந்து குளு, குளு சூழ்நிலை நிலவியதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் இன்றும் மழை
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், தாம்பரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. நகர பகுதிகளான கிண்டி, தியாயராய நகர், அண்ணா நகர், எலும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

வாகன ஓட்டிகள் அவதி
கடந்த சில நாட்களாகாவே நல்ல மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் மட்டற்ற மகிழ்ச்சியில் மிதந்துள்ளனர். அதே வேளையில் சென்னையின் தாழ்வான பகுதிதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் காணப்பட்ட போதிலும் மழை வராமல் ஏமாற்றியது.

2 நாட்கள் மழை நீடிக்கும்
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அண்ணா நகர் மேற்கில் உள்ள ஜி.சி.சி ஏ.ஆர்.ஜி.யில் கடந்த 30 நிமிடங்களில் 33 மி.மீ. மழை பெய்துள்ளது. கடைசி 45 நிமிடங்களில் புழலில் 48 மி.மீ மழை மற்றும் வில்லிவாக்கத்தில் 54 மி.மீ மழையும் என செம மழை கொட்டியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications