சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Chennai Koyambedu traps in heavy traffic jam as continuous 3 days holidays

    சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசலால் சென்னை கோயம்பேடு சிக்கி தவித்தது.

    சென்னை கோயம்பேட்டில் பொதுவாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதாவது சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம், தனியார் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கும். இதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமாகவே பேருந்துகள் இயக்கப்படும்.

    போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல்

    இந்த நிலையில் இந்த வாரம் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறையாகவும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    2 மணி நேரத்துக்கு

    2 மணி நேரத்துக்கு

    அது மட்டுமின்றி மாலை நேரத்தில் பெய்த மழையால் போக்குவரத்து முடங்கியது. இந்த போக்குவரத்து சீராக 2 மணி நேரத்துக்கு மேல் ஆனது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்ட நெரிசல்

    கூட்ட நெரிசல்

    மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் அருகே வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இந்த கூட்டநெரிசலை பார்ப்பதற்கு ஏதோ தீபாவளி , பொங்கல் கூட்டம் போல் இருந்தது.

    தொடர் விடுமுறை

    தொடர் விடுமுறை

    இந்த கூட்டநெரிசலாலும் வாகன போக்குவரத்து அதிகரித்ததாலும் அலுவலகம் முடித்துவிட்டு வீடு திரும்பியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது போன்று தொடர் விடுமுறை நாட்களில் கூட்டநெரிசலை குறைக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டனர்.

    English summary
    Chennai Koyambedu traps in heavy traffic jam as continuous 3 days holidays.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X