சென்னை புறநகரில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை..தணிந்த வெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது.
சென்னை: புறநகர் பகுதிகளான செம்பரம்பாக்கம், திருமழிசை, பூந்தமல்லி, திருவேற்காடு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் வேளச்சேரி, கிண்டி பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிற்பகல் நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. வேளச்சேரியில் கட்டிடங்கள் வீடுகள் தெரியாத அளவிற்கு பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதே போல புறநகர் பகுதிகளாக பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், குன்றத்தூர், திருமழிசையிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications