பாடப்புத்தகங்களில் பாலியல் புகார் எண்கள்...மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு செல்லலாம் - அன்பில் மகேஷ்
வகுப்புகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார் எண்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள 2,87,467 வகுப்புறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 ,14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தற்போது மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம்பெற செய்யப்படும் என்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவை, கரூரில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மாணவிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச அழைப்பு எண் 1098 ,14417 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்களில் மாணவ, மாணவிகள் அச்சமின்றி அழைத்து புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் உள்ள லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழகத்தில் உள்ள 2,87,467 வகுப்புறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 ,14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபடும் என்றார்.
தற்போது மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம்பெற செய்யப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வரக்கூடிய கல்வியாண்டில் எல்லா புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அளிக்கப்படும் என்றும் கூறினார். அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை போக்சோ சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என எண்ணாமல் பள்ளி நிர்வாகம், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய வகையில் செயல்பட வேண்டும். பள்ளிகள் முழுமையாக இயங்க துவங்கிய உடன் இதன் பலன் நமக்கு தெரியவரும்.
இந்த ஆண்டு பொது தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அமைச்சர் மகேஷ், மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்கிற விவரம் இடம்பெறும் என்றார்.
மாணவர்களின் கற்றல் குறைபாட்டை சரிசெய்ய , இல்லம் தேடி கல்வி திட்டம் போதுமானதாக இருக்கும். இதுவரை தன்னார்வளர்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்தார். மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் 35 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications