சித்ராவின் உயிரைப்பறித்த ஹேமந்த் சந்தேக புத்தி - தற்கொலைக்கு தூண்டிய ஆதாரத்தோடு கைது செய்த போலீஸ்
சந்தேக புத்தியால் குத்தி குத்தி பேசி மனதை ரணமாக்கி கடைசியில் உயிரை பறித்த ஹேமந்த் கைது செய்யப்பட்டது பற்றி காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சென்னை: நடிகை சித்ராவின் மரணம் ஆறாத ரணமாக ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. அவரது தற்கொலைக்கு காரணமே காதல் கணவன் ஹேமந்தின் சந்தேக புத்திதான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அப்படி நடிக்காதே இப்படி டான்ஸ் ஆடாதே நெருக்கமாக நடிக்காதே என்று சித்ராவை குத்தி குத்தி மனதை ரணமாக்கி கொடுமைப்படுத்தியிருக்கிறார் ஹேமந்த். அதற்கான ஆதாரங்களை அழித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஹேமந்தை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சின்னப்பாப்பா பெரியபாப்பாவாக வீட்டிற்குள் நுழைந்து, வேலுநாச்சியாராக சிலம்பம் சுற்றி வீர பெண்மணியாக இதயங்களில் நுழைந்து, பாண்டியன் ஸ்டோர் முல்லையாக ரசிகர்களின் மனதில் மணம் வீசியவர் சித்ரா. இப்போது அவர் இல்லாவிட்டாலும் அவரைப்பற்றிய செய்திகள் தினம் தினம் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
அழகான நடிகை மட்டுமல்ல, அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். சக நடிகை, நடிகர்களுடன் தோழமை உணர்வோடு பழகிய சித்ராவிற்கு எமன் கணவர் ரூபத்தில் வந்ததுதான் சோகம்.

கணவர் ஹேமந்த் கைது
சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறை விசாரணையில் பல தகவல்கள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. தனது மகளை ஹேமந்திற்கு திருமணம் செய்து வைக்க சித்ராவின் தாய்க்கு தயக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.

நடித்த சித்ரா தடுத்த கணவர்
திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் நடக்க, சீரியலில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினார் சித்ரா. அதுதான் ஹேமந்திற்கு பிடிக்காமல் போய்விட்டது. சக ஆண் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க தடை போட்டார். சீரியலில் நடிக்கவே தேவையில்லை என்றும் கூறியதாகவும் இதனால் மனமுடைந்த சித்ரா முன்பே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

கணவரின் சந்தேகம்
சீரியலில் சக நடிகருடன் நடிப்பதும் நடனமாடுவதும் ஹேமந்த் மனதில் உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரிக்க சித்ராவிடம் சண்டை போட்டு மனதை ரணப்படுத்தியிருக்கிறார். இதனால் காயப்பட்ட சித்ரா, ஹேமந்தின் அப்பாவிடம் போனில் கதறியிருக்கிறார். அந்த ஆடியோ செல்போனில் பதிவாகியிருந்தது. அதை அழித்ததுதான் ஹேமந்த் மீதான பிடி இறுக காரணமாக அமைந்துள்ளது.

கைது செய்தது ஏன்
சித்ராவின் செல்போன் பதிவில் இருந்து அழிக்கப்பட்ட ஆடியோ பதிவை மீட்ட பிறகுதான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். எது எப்படியோ சின்னத்திரை வானில் மின்னலென தோன்றி மறைந்த சித்ராவின் மரணத்திற்கு கணவரின் சந்தேக புத்தி காரணமாக அமைந்து விட்டது.

விசாரணையில் வெளியாகும் தகவல்
சித்ரா போனில் பேசியதை எல்லாம் மறைத்த ஹேமந்த் பெற்றோர்கள், யாரைக்காப்பாற்ற தனது மகனை கைது செய்தனர் என்று கேட்டதுதான் கொடுமையிலும் கொடுமை. ஆர்டிஓ விசாரணையில் இன்னும் என்னென்ன தகவல்கள் வெளியாகப்போகிறது என்று பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications