சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன?
சென்னை: சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவிலான கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது என தனியார் கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 3ஆவது அலை தொடங்கிவிட்டதாக மருத்துவ நிபுணர்களும் கொரோனா டாஸ்க் போர்ஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் ஓமிக்ரான் என்ற புதிய வேரியண்ட்தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த வேரியண்ட் வேகமாக பரவி வருகிறது, என்ற போதிலும் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக ஒரு ஆறுதல் செய்தியை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

மெரினாவுக்கு தடை
தமிழகத்தை பொருத்தவரை கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணங்கள், இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது போல் மழலையர் முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு நேரடி வகுப்பிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அது போல் சென்னையில் 876 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் அண்டைய மாவட்டங்களான திருவள்ளூரில் ஒரே நாளில் 80 பேருக்கும் செங்கல்பட்டில் 158 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் புதிதாக 105 பேருக்கு கொரோனா
கோயமுத்தூரில் 105 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு கொரோனா கேஸ்களில் ஒன்று சென்னையிலிருந்து என்ற அளவுக்கு அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களில் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து 70 சதவீதம் பேர் உள்ளனர்.

கிளஸ்டரான பொது இடங்கள்
இறுதி சடங்குகள், திருமணங்கள், மார்க்கெட்டுகள், பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து கிளஸ்டர் போல் கேஸ்கள் பரவுவதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்ற தரவு வெளியாகியுள்ளது.

சென்னை மண்டலங்கள்
இதுகுறித்து கொரோனா தரவு தனியார் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையில் உள்ள மண்டலங்கள் வாரியாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகம்.
Recommended Video

எந்த மண்டலத்தில் ஆக்டிவ் கேஸ்கள்
தேனாம்பேட்டையில் 538, அடையாறில் 528, கோடம்பாக்கத்தில் 520, ராயபுரத்தில் 432, அண்ணாநகரில் 397, வளசரவாக்கத்தில் 289, திருவிக நகரில் 276, தண்டையார்பேட்டையில் 272, அம்பத்தூரில் 260, ஆலந்தூரில் 186, பெருங்குடியில் 149, சோழிங்கநல்லூரில் 137, திருவொற்றியூரில் 108, மாதவரத்தில் 95, மணலியில் 32 , மற்ர மாவட்டங்களில் 40 என கொரோனாவால் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications