வண்டிய அறிவாலயம் விடுரா சம்முவம்.. சீண்டலுக்கு காயத்ரி பதிலடி! வார் ரூம் பாய்ஸ்.. என்ன அநியாயம் இது?
சென்னை : வார் ரூம் பாய்ஸ்.. என்ன அநியாயம் இது? நான் என்ன செய்தாலும் என்னை ட்ரோல் பண்ணனும்னு சொல்லி இருக்காங்களா? என காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் ஆதரவாளர்களை கிண்டல் செய்துள்ளார்.
சமீப சில மாதங்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இருந்து வந்த பனிப்போர் சில நாட்களுக்கு முன்பு உச்சமடைந்தது.
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை ட்விட்டரில் கடுமையாக ட்ரோல் செய்ததால், பொங்கி எழுந்த அவர், என்னை ட்ரோல் செய்வதே அண்ணாமலை ஆதரவாளரின் வார் ரூம் வேலை என விமர்சித்தார்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால், காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை.

காயத்ரி பாராட்டு
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் இன்று, "எனது பகுதியில் மாண்டஸ் புயலால் விழுந்த மரங்கள் மற்றும் கனமழையால் தேங்கிய தண்ணீர் விரைவாக அகற்றப்பட்டது. சென்னை மாநகர இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை சிறப்பாகப் பணி புரிந்துள்ளது. களத்தில் இருந்து வேலை செய்பவர்களை கட்டாயம் பாராட்ட வேண்டும்." என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

புரிஞ்சுடுத்து
காயத்ரி ரகுராமின் இந்தப் பதிவையொட்டி பலரும், அவர் திமுகவில் இணையப் போகிறாரா எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். "புரிஞ்சுடுத்து.. புரிஞ்சுடுத்து.. வண்டிய அறிவாலயம் விடுரா சம்முவம்" என கிண்டலாக ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்திருந்தார். திமுகவில் இணைவதற்கு சிக்னல் கொடுக்குறீங்களா மேடம் என்றும் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

திமுகவின் ஸ்லீப்பர் செல்
மேலும், உதயநிதி முன்னிலையில் திமுகவில் சேரப்போகிறார், நல்லவேளை பாஜக தப்பித்தது என்றும், எப்போது அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேரப்போகிறீர்கள் என்றும் பலர் விமர்சித்திருந்தார். பாஜகவில் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார் என்றும் பாஜக ஆதரவாளர்களே காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்தனர்.

வார் ரூம் பாய்ஸ்
இந்த கமெண்ட்களால் கொதித்துப்போன காயத்ரி ரகுராம், "கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி, அவர்களுக்கு மாலை அணிவித்தோம். ஆனால் இப்போது மாண்டஸ் புயலுக்கு நான் அரசு ஊழியர்களை பாராட்ட வேண்டாமா? வார் ரூம் பாய்ஸ்.. என்ன அநியாயம்? நான் என்ன செய்தாலும் என்னை ட்ரோல் செய்ய ஆசையா? எந்த அரசாங்கமாக இருந்தாலும் துப்புரவு பணியாளர்கள் அவர்களின் கடினமான பணிக்காக பாராட்டப்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

வார் ரூம் அட்டாக்
தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பற்றிய ட்ரோல் பதிவுகளுக்கு பாஜகவின் தொழில் பிரிவு செயலாளரான செல்வக்குமார் என்பவர் லைக் போடுவதை ஆதாரத்துடன் குற்றம்சாட்டியிருந்தார் காயத்ரி. அண்ணாமலைக்கு நெருக்கமானவரான செல்வக்குமார் வார் ரூம் ஒன்றை நடத்துவதாகவும், அவர்கள் தன்னை திட்டமிட்டு அட்டாக் செய்வதாகவும் கூறி அதிர்ச்சி கிளப்பினார் காயத்ரி.

சஸ்பெண்ட்
மேலும், திருச்சி சூர்யா - டெய்சி சரண் ஆடியோ விவகாரம் பற்றியும் அண்ணாமலையை கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

மீண்டும் ஆவேசம்
காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், இன்று தன்னை கிண்டல் செய்து கமெண்ட் செய்தவர்களை அண்ணாமலையின் வார் ரூம் பாய்ஸ்.. நான் என்ன செஞ்சாலும் ட்ரோல் பண்ண சொல்லிருக்காங்களா? என்கிற ரீதியில் விமர்சித்து பதிவிட்டுள்ளார் காயத்ரி.












Click it and Unblock the Notifications