என்னா வேகம்.. ரவுடியின் செயலுக்கு காரணம் சொல்வதில் இவ்வளவு ஆர்வம்: சந்தேகம் கிளப்பும் இந்து முன்னணி!
சென்னை: காவல்துறை ஆளும்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும், ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது என்றும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், குண்டு வீசிய நபரான கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். அண்மையில் தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கருக்கா வினோத் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை - காவல்துறை இடையே பிணக்கை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது. ஆனால், ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என டிஜிபியே விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் என்று திமுகவும், திமுகவினர் தான் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்துள்ளனர், திமுகவினர் சொல்லும் நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை விடுத்துள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தமிழக காவல்துறையைச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர், ஆரியம், திராவிடம் என்பது எங்கும் இல்லை. நாடு விடுதலையான நாளை துக்க நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பள்ளி படிப்பை கூட முடிக்காத தற்குறி கால்டுவெல் தான் திராவிட சித்தாந்திகள் தூக்கி பிடிக்கும் அறிவாளி என்ற கருத்துக்களை மருது பாண்டியர் நிகழ்வில் பேசினார். இதற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அவர்கள் தமிழக கவர்னரை அநாகரிகமாக விமர்சனம் செய்து இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை ரவுடியான கருக்கா வினோத் கவர்னர் மாளிகை மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளான். நல்ல வேளையாக அவை தீப்பற்றி வெடிக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்து இருந்தால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அந்த ரவுடி கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் இருப்பதாகவும் முதல் நாள் தான் அவன் பிணையில் வெளிவந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய ரவுடிக்கு தமிழகத்தில் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது என்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவை அடைந்துள்ளது என்பது புரியும்.
மேலும் முதல் நாள் வந்தவன் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் தைரியம் எங்கு இருந்து வருகிறது. பத்து நாட்களில் மீண்டும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற தைரியம் தானே? மேலும் அந்த ரவுடி பெரிய சமூக அக்கறை உள்ளவன் போல சித்தரிக்கப்பட்டு அதாவது கவர்னர் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒரு செய்தியும், தமிழக கவர்னர் நீட் தேர்வு ரத்து செய்யக் கொடுத்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்ற கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் செய்தி வெளியாகிறது.
காவல்துறை ஆளும்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது. இத்தகைய போக்கு காவல்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது நடந்து வருகிறது. இது ஒருவகையான பாசிச மனநோய்.
எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கும் என்ற பயத்தை உருவாக்க இதுபோல் நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதுமட்டுமல்லாது மேலும் ஒரு அநாகரிகமான செயலை ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அது சமூக வலைதளங்களில், பொதுக் கூட்டங்களில் திமுக அரசை அமைச்சர்கள் செயல்பாட்டை ஜனநாயக ரீதியில் விமர்சனம் செய்தாலே குறைந்தது ஐந்து பிரிவுகளில் வழக்கு போடுவதும் அதில் ஜாமினில் வெளிவர முடியாத இரண்டு பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது காவல்துறை.
அதேசமயம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை திமுகவினரின் மனம் குளிர அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதே தலையாய கடமையாக நினைத்து செயல்படுகிறது என்பது வேதனையான உண்மை. தமிழகத்தில் உச்சபட்ச பாதுகாப்பு உள்ள இடத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம். எனவே இது போன்ற வன்முறை செயலில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications